அமலாபால் வாங்கிய பென்ஸ்... அதிர்ச்சியில் இளைஞர் !

0
நடிகை அமலாபால், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடெஸ் எஸ் ரக காரை வாங்கினார். கேரளாவைச் சேர்ந்த அவர், காரை அங்கே பதிவு செய்தால், ரூ. 20 லட்சம் வரி கட்ட வேண்டும். 
அமலாபால் வாங்கிய பென்ஸ்... அதிர்ச்சியில் இளைஞர் !
அதனால், புதுச்சேரியில் பதிவு செய்துள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த வர்கள் மட்டுமே, அங்கு கார் பதிவு செய்ய முடியும். 

அமலாபாலின் மெர்சிடெஸ் கார், புதுச்சேரி திலாஸ் பேட்டையில் உள்ள புனித தெராசா தெருவைச் சேர்ந்த இன்ஜினீயரிங் படித்து வரும் இளைஞர் ஒருவரின் பெயரில் பதிவு செய்யப் பட்டிருக் கிறது.

இதில் சுவாரஸ்யம் என்ன வென்றால், அந்த இளைஞ ருக்கே தெரியாமல் அவரின் பெயரில் பதிவு செய்யப் பட்டுள்ளது தான். 

ஆகஸ்ட் 4-ம் தேதி, இந்த கார் சென்னை யில் உள்ள ட்ரான்ஸ் கார் நிறுவன த்தில் வாங்கப் பட்டுள்ளது. ஆகஸ்ட் 9-ம் தேதி, புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பதிவுச் செலவாக 1.75 லட்சம் மட்டுமே ஆகியுள்ளது. இதனால், கேரள அரசுக்கு ரூ.20 லட்சம் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மோட்டார் வாகனச் சட்டப்படி, வேறு மாநிலங்களில் கார் பதிவு செய்யப் பட்டாலும் 
ஒரு வருடத் துக்குள் கேரளா வில் மீண்டும் பதிவு செய்யப்பட வேண்டும். அப்போது, காரின் விலை யில் 20 சதவி கிதம் சாலை வரியாகச் செலுத்த வேண்டும்.

இந்த விவகாரம் குறித்து மலையாளச் செய்தி சேனல் செய்தி வெளியிட் டுள்ளது. 

அமலாபால் கார் பதிவு செய்த புதுச்சேரி இளைஞரின் வீட்டுக்குச் சென்று செய்தியாளர்கள் விசாரித்த போது, அமலாபால் யார் என்றே எங்களுக்குத் தெரியாது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 

விஷயம் தெரிந்து, இளை ஞரின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உறைந் துள்ளனர். போலி முகவரியில் காரை பதிவு செய்தால், 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. 
தற்போது அந்த கார் கேரள மாநிலம் எடப்பள்ளி யில் உள்ள அமலாபா லின் வீட்டில் நிறுத்தப் பட்டுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings