ஹிஜாமா ( حجامة ) என்றால் என்ன? ஹிஜாமா ('Hijama' Arabic: حجامة lit. "sucking") என்ற அரபி வார்த்தை hajm '(உறுஞ் சுதல் - Sucking) இருந்து பெறப்படுகிறது.
கப் அல்லது கோப்பையில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி, பின்னர் நமது தோல் மேற் பரப்பில் வைத்து தூய்மையற்ற அல்லது கெட்ட இரத்த கழிவு களை உடலின் பல்வேறு இடங் களில் இருந்து வெளி யேற்றும்
மருத்துவ முறை தான் ஹிஜாமா (Hijama).நபி ( ஸல்) அவர்கள் இதைப் பற்றி என்ன கூறியுள்ளார்கள்?
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் எந்நோயையும் அதற் குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவ தில்லை என அபூ ஹுரைரா (ரலி) அறி வித்தார். ( புஹாரி - 5678 )
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார் நபி (ஸல்) அவர்கள் 'மூன்றில் (நோய்க்கு) நிவாரணம் உண்டு.
தேன் அருந் துவது, இரத்தம் வெளி யேற்றும் கருவி யால் (உடலில் கீறுவது, தீயால் சூடிட்டிக் கொள்வது ஆகிய னவே அந்த மூன்று மாகும்.
(ஆனால்,) தீயால் சூடிட்டுக் கொள்ள வேண்டா மென என் சமுதாயத் தாருக்கு நான் தடை விதித்கிறேன் என்று கூறினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், தேனிலும் இரத்தம் வெளியேற்றுவதிலும் நிவாரணம் உள்ளது என வந்துள்ளது (புஹாரி - 5680)
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார். நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றி ருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். (புஹாரி - 5694 )
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார் நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம்' கட்டியிருந்த நிலையில் குருதி உறிஞ்சி எடுத்துக் கொண்டார்கள். (புஹாரி - 5695 )
இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் தம் தலையில் குருதி உறிஞ்சி எடுத்தார்கள். (புஹாரி - 5699 )
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய மிஃராஜ் பயணத்தின் போது மலக்கு மார்களின்
கூட்டங்களை கடக்கும் போது ஒ முஹம்மத், ஹிஜாமா செய்யுங்கள் என்று சொல்லப் படாமல் தவிர கடக்கவில்லை. (நூல்: திர்மிதி)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், யாரெல் லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில்
ஹிஜாமா செய்கிறா ர்களோ, அது எல்லா நோய் க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)
ஹிஜாமா ( حجامة ) செய்தால் எற்ப்படும் பயன்கள்:
முதன்மை யான பயனும், நன்மை என்ன வென்றால் இது நபி (ஸலஃ) யின் வழிமுறை ( சுன்னத்), அதற் கான நன்மை கள் இவ்வுலக த்திலும், மறுமை நாளிலும் கிடை க்கும்.
இந்த ஹிஜாமா ( குருதி (அ) இரத்த உறுஞ்சு தல் மூலம் இரத்த ஓட்ட த்தை சமசீர் செய்து Kinetic energy என்ற ஆற்றலை அதிகப் படுத்து கிறது.
இது இரத்த த்தில் இருந்து நச்சுகள் மற்றும் பிற கழிவு பொருள் அகற்று கிறது. இதனால் சில வகை யான நோய்கள் துரிதமாக குண மடைய உதவு கிறது.
ஹிஜாமா (حجامة ) செய்வதின் மூலம் சில வகையான நோய்கள் உதாரண மாக இரத்தம் சார்ந்த Metabolic disease வருவதை நாம் முன் எச்சரிக் கையாக தடுக்க லாம். அதாவது வரும் முன் காப்போம் ( Prevention better than cure).
ஹிஜாமா செய்வதால் சில தீய கெட்ட எண்ணங்களால் உருவாகும் கண்ணோறு, செய்வினை போன்ற நோய்களின் பாதிப்பதை குறைக்கலாம் என கூறப்படுகிறது.
ஹிஜாமா முறையில் எந்தவித பக்க விளைவுகள் இல்லை, இது சுமார் 70% நோய்களையும், உடலின் குறைபாடுகளை குணமாக்க உதவுகிறது.
இதை நாம் நவீன மருத்துவத்துடன் செய்தால் நம் உடல் நோய் மிக வேகமாக குணமடையும்.
நாம் உடல் நிலை சரியில்லாமல் நோய் வாய்ப்பட்டு இருக்கும் சமயத் திலும், நாம் உட் கொள்ளும் மருந்தி லிருந்தும்,
அதிக நச்சுப் பொருட்கள் (Toxins), கழிவுப் பொருட்கள் ( Waste metabolic product) உடலி ருந்து வெளியோற வழி இல்லாமல் நம் இரத்தத்திலும், தோல் அடிப்புறம் ( Subcutaneous area) களிலும் சேகரமாகியுள்ளது.
அவற்றை நாம் ஹிஜாமா மூலம் அப்புறப்படுத்தி நம் உடல் நோய்களை குணப்படுத்த துரிதப்படுத்தலாம்.
ஒவ்வோரு வருடத் திற்கு இரண்டு மற்றும் நான்கு முறை ஹிஜாமா சிகிச்சை செய்வ தனால் இடைப் பட்ட காலம் காலங் களில் எற்ப்பட்ட,
உடலில் சேகர மாகிய கழிவு களை நீக்கி, இரத்ததை சுத்தப் படுத்தி, இரத்த சுழற்சி மேம் படுத்த லாம்,
புதிய ஹார்மோன்கள் உற்பத்தியை துண்டுவதின் மூலமும், உடலின் அமைப்புகள் இயற்கை சமநிலை ( Natural Biological Balance) மேம்படுத்துவதன் மூலம்பல உடல் சார்ந்த நோய் களை தடுக்க லாம்.
இரத்த மற்றும் நிணநீர் (Lymph) தேங்கி கழிவுகளை அகற்ற உதவுகிறது. இம்முறையால் நல்ல இரத்தங்கள், இரத்த செல்கள் (Blood cells - RBC, WBC ), இரத்தப் புரதங்கள் ( Blood Protein) இவைகள் வெளியேறுவதில்லை.
எந்த காலங் களில் ( நாட் களில் ) ஹிஜாமா( حجامة ) செய்ய லாம்? இந்த ஹிஜாமா இஸ்லாமிய காலண்ட ரான
சந்திர காலண்டர் படி 'ஒற்றைப் படை' நாட் களில் செய்து சிறந்த தாக பரிந்துரை க்கப்படு கிறது. மேலும், குறிப் பாக திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் நாட் களில் செய்து சிறந்தது.
நபி (ஸல்) அவர்கள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங் களில் ஹிஜாமா செய்வதை தவீர்த்து ள்ளார் கள்.
மேலும் புதன் கிழமை களில் Hijama செய்வதை தடுத் துள்ளார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறி னார்கள்,
யாரெல்லாம் பிறை 17, 19, 21 ஆகிய தினங்களில் ஹிஜாமா செய் கிறார் களோ, அது எல்லா நோய் க்கும் நிவாரணம் ஆகும். (நூல்: ஸஹீஹ் ஸுனன், அபூ தாவூத்)
இப்னு உமர் (ரலி) கூறிய அறிவிப்பு இப்னு மாஜா (3487) பதிந்துள்ளது அதன் கருத்தாவது, நபி (ஸல்) அவர்கள் வெறும் வயிற்றில் ஹிஜாமா செய்வது குணப்படுத்தக் கூடியது என்றும், இறை அருள் கிடைக்கும் என்றும் கூறி யுள்ளார்கள்.
மேலும் அது அறி வாற்றல் மற்றும் நினை வாற்றல் அதிகரிக்கிறது. எனவே வியாழக்கிழமை அன்று அல்லாஹ்வின் அருள் மீது ஆதரவு வைத்து ஹிஜாமா செய்யுங்கள்.
புதன், வெள்ளி தினங்களில் ஹிஜாமா செய்யாதீர்கள். சனி மற்றும் ஞாயிறு தினங்களில் செய்வதை தவீர்பதின் மூலம் பாது காப்பாக இருங்கள்.
திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் ஹிஜாமா செய்யுங்கள். இந்த நாட்களில் தான் நபி ஐயூப் (அலை) நோய் இருந்து பாதுகாப்பு பெற்றார்கள்.
Thanks for Your Comments