புதுச்சேரி யில் சொகுசுக் கார் வாங்கிய விவகா ரத்தில் வரி ஏய்ப்பு செய்த புகாரில் நடிகை அமலாபால் மீது வழக்குப் பதிவு செய்ய புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி அதிரடி யாக உத்தர விட்டுள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகை யில் இன்று மாலை பத்திரிகை யாளர் களைச் சந்தித்த துணை நிலை ஆளுநர் கிரண்பேடி,
ஆளுநர் மாளிகையில் இது வரை எந்தக் கோப்புகளையும் நான் தேக்கி வைக்க வில்லை.
ஆனால், தொடர்ச்சியாகச் சில சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் மாளிகை யில் கோப்புகள் தேங்கிக் கிடப்ப தாகப் பொய்யான குற்றச் சாட்டுகளைக் கூறி வருகி ன்றனர்.
அப்படி குற்றச் சாட்டுகளை கூறு பவர்கள், எந்தக் கோப்புகள் தேங்கி யுள்ளன என்பது குறித்து ஆதாரங் களுடன் நிரூபிக்க முடியுமா.
முத்தியால் பேட்டை தொகுதிக் கான சுத்தி கரிக்கப் பட்ட குடிநீர் திட்டத்துக் கான கோப்புகள் ஆளுநர் மாளிகை யில் தேக்கி வைக்கப் பட்டுள்ள தாகக் கூறுகிறார் சட்டமன்ற உறுப்பினர்.
ஆனால், அந்தக் கோப்பு ஆளுநர் மாளிகை யில் இல்லை. பொதுப் பணித் துறையில் தான் இருக் கின்றது. நிர்வாக ரீதியாக நடைபெறும் தடைகள் அனைத் துக்கும் என்னைக் குற்றம் சாட்டுவது தவறு.
நடிகை அமலாபால் சொகுசு கார் வாங்கி யதில் வரி ஏய்ப்பு செய்துள்ள தாகப் புகார் வந்துள்ளது.
அது தொடர்பாக முதுநிலை காவல் கண்காணிப் பாளரிடம் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய உத்தர விட்டு ள்ளேன்.
அமலாபால் கார் வாங்கி வரி ஏய்ப்பு செய்ததைப் போல் வேறு யாரெல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என விசாரணை செய்ய புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையருக்கும் உத்தர விட்டுள்ளேன்.
இது தொடர்பாக அவர் 15 நாள்களுக்குள் விசாரணை நடத்துவார் என்று தெரிவித்தார்.
Thanks for Your Comments