பாணா காத்தாடி... இயக்கு நருக்கும் ஹீரோ அதர்வா விற்கும் முதல் படம். இன்றைய ஆந்திர மருமகள் சமந்தா இதற்கு முன் சில படங்கள் நடித்திருந்தாலும் முதன் முதலில் திரையில் தோன்றியது இந்த படத்தில் தான்.
இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் அடுத் ததாக இயக்கி யிருக்கும் படமான 'செம போத ஆகாத' பற்றி தெரிந்து கொள்ள அவரைத் தொடர்பு கொண்டோம்.
ஷார்ட் ஃபிலிம்னா என்னனே தெரியாத சமயத்துல அதுக்கு தேசிய விருது வாங்கியது பத்தி சொல்லுங்க...
“ஆமாங்க. இருபது வருஷத் துக்கு முன்னாடி ஷாட்ர் ஃபிலிம்க் கான ஸ்பேஸ் ரொம்ப ரொம்ப குறைவு.
நாங்க ஃபிலிம் இன்ஸ்டி யூட்ல படிச்சது னால ஷார்ட் ஃபிலிம் பத்தி கொஞ்சம் தெரிஞ்சது. அந்த நேரத்து லதன் ஃபிக்சன் கேட்டகரில தேசிய விருது கிடைச்சது.
எடிட்டர் லெனின் தான் எங்களோட பெரிய இன்ஸ் பிரேஷன். அவர் தான் ஷார்ட் ஃபிலிம்க் கான ஒரு அமைப்பை கொடுத்தார்.
ஆனா, இப்போ கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி மாதிரி யான ஆட்கள் இன்னைக்கு ஷார்ட் ஃபிலிமை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போயி ட்டாங்க.
படம் இயக்க ணும்னு கனவோடு இருக்க வங்களை ஷார்ட் ஃபிலிம் மூலமா சினிமாக் குள்ள போகலாம்னு ஒரு ட்ரெண்ட் செட் பண்ணி ட்டாங்க."
ஷார்ட் ஃபிலிம் பண்ணதுக்கு அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு 'பாணா காத்தாடி'. அந்த இடை வெளிக்கான காரணம் என்ன?
"ஷார்ட் ஃபிலிம் களுக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. ஆனா, படம் பண்ண முடியாம போச்சு.
அந்த நேரங்கள்ல நான் டிவில கொஞ்சம் பிஸியா இருந்தேன். சீரியல், ரியாலிட்டி ஷோனு நிறைய எபிசோட்கள் பண்ணேன்.
சன் டிவில 'நாளைய நட்சத்திரம்' னு ஒரு ஷோ பண்ணோம். அப்புறம் 'கிங் க்வீன் ஜேக்'னி விஜய் டிவில ஷோ பண்ணி னோம்.
அதுல தான் அனிருத், தர்புகா சிவா எல்லாம் பெர்ஃபார்ம் பண்ணாங்க. ஜெகன், ரம்யாவுக்கு
இது தான் ஆங்கரிங்ல முதல் ஷோ. இப்படி நிறைய ரியாலிட்டி ஷோக்கள் பண்ணிட்டு இருந்தது தான் காரணம்."
'பாணா காத்தாடி' படத்துல அதர்வா, சமந்தானு எப்படி முடிவு பண்ணீங்க?
"முதல்ல பண்ண வேண்டிய படம் இன்னும் பண்ணலை. அந்த கதையை தான் தயாரிப் பாளர் கிட்ட சொன்னேன். அப்போ தான் இந்த கதையை படம் பண்ண வாய்ப்பு கிடைச்சது.
இப்போவும் அந்த கதையை பண்ண லாம்னு தயாரிப் பாளர் சொல்லிருக் காங்க. அது ஹாரர் ஜானர்ல இருக்கும். இந்த கதை இல்லாம இன்னொரு கதைக்குத் தான் அதர்வா ஹீரோனு முடிவு பண்ணி ருந்தேன்.
சமந்தா ஏற்கனவே சில படங்கள்ல நடிச்சி ருந்தாலும் முதலில் வெளியானது 'பாணா காத்தாடி' தான். படத்துக்கு மூணு மாசம் வொர்க்ஷாப் பண்ணோம்.
அதனால அவங்க புது முகங் களாவே தெரியலை. முரளி சாரை கலாய்க்கத் தான் அந்த படத்துல அவருக்கு ஒரு சீன் வெச்சோம்.
அது அவருக்கும் தெரியும். அவர் அவ்ளோ ஸ்போர்டிவா எடுத்து நடிச்சார். கதையில நிறைய மாற்றங்கள் எல்லாம் செய்யப் பட்டுச்சு."
அதர்வா அப்பவும் இப்பவும் உங்க பார்வை யில எப்படி இருக்கார்? என்ன வித்தி யாசம் இருக்குனு நினைக் குறீங்க?
“அதர்வாவை காலேஜ் ஸ்டூடன் டாகவும் பார்த்தேன். இப்போ ஒரு பெரிய சினிமா ஸ்டாரா கவும் பாக்குறேன்.
உண்மை யாக அதர்வா ஒரு சினிமா வெறியன். சின்னச் சின்ன நுணுக்க மான விசயங் களை கூட அருமையா நடிக்கிறார்.
சீன் என்னனு சொல்லிட்டா போதும் சூப்பரா மேனேஜ் பண்ணி டுவார். பாலா சார் படத்துல நடிச்சு நிறைய விசயங் கள்ல தன்னை செதுக்கி தயார்ப் படுத்தியி ருக்கார்.
காலேஜ் பையான அதர்வாவு க்கும் இப்போ இருக்கும் அதர்வாவு க்கும் மிகப் பெரிய மாற் றங்கள் நடந்திரு க்குன்னே சொல்ல லாம்.
இப்போ அவரே இந்த படத்தை தயாரிக் கிறார்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோசமா இருக்கு. "
'பாணா காத்தாடி' க்கு பிறகு இந்த படம் எடுக்க இவ்ளோ இடை வேளை ஏன்?
“நிறைய ஷோ பண்ணிட்டு இருந்தேன். மிர்ச்சி மியூசிக் அவார்ட்ஸ் மாதிரி யான நிகழ்ச் சிகளை இயக்கிட்டு இருந்தேன்.
ஒரு வகையில் இதுவும் படம் பண்ற மாதிரி தான். ஒரு எபிசோடுக்கு 15 லட்சம் வரை செலவு செய்யப் படுது.
கோடிக் கணக்கில் செலவு செஞ்சு பிரம் மாண்டமா நிகழ்ச்சி பண்றோம். டிவி இல்லைனா சினிமால நிறைய பேர் காணாமல் போயிருப் பாங்க.
அதனால டிவில வொர்க் பண்றதும் ஹாப்பி தான். முதல்ல நம்மளோட அடிப்படை விசயங் களை தயார் படுத்திட்டு தான் மத்ததுக்கு போகணு ங்கறது தான் என் லாஜிக்.
நடுவுல வேறொரு கதை ப்ளான் பண்ணேன். அது மிஸ் ஆகிடுச்சு. ஆனா, இனி அந்த கேப் இருக்கா துனு உறுதியா சொல்றேன்".
'செம போத ஆகாத' என்ன மாதிரியான படம்?
"முழுக்க முழுக்க கமர்சியல் என்டர் டெயினர் படமா கண்டிப்பா இது இருக்கும். கொஞ்சம் போரான உடனே தியேட்டர் குள்ள வாட்ஸ்அப் பார்க்க ஆரம்பிச் சிடுறாங்க.
ஆனா, இதுல அந்த சூழல் வராது, வரக்கூடாதுனு ப்ளான் பண்ணி ருக்கோம்.
நிறைய ஸ்டரஸ்ல இருக்க மக்கள் ரிலாக்ஸ் பண்ண படம் பாக்க வர்றாங்க. கண்டிப்பா 'செம போத ஆகாத' சந்தோசப் படுத்தும்னு நம்புறோம்."
உங்களோட ரெண்டு படத்துலயுமே யுவன் இருக்காரே...
"என் முதல் படத்துக்கு கிடைச்ச வெற்றிக்கு யுவன் முக்கிய பங்கு. எனக்கும் யுவனுக்கும் வேவ் லெங்த் செட் ஆகிடுச்சு.
'செம போத ஆகாத' படத்துக்கு கதை சொன்ன அடுத்த நிமிஷம் கம்போசிங் போலாமானு கேட்டார். மெலடி, சைலன்ஸ், த்ரில்லர்னு யுவன் இந்த படத்தில புகுந்து விளையாடி இருக்கார்.
சீக்கிரம் யுவன் ரசிகர் களுக்கு விருந்து உண்டு. யுவன் இல்லாமல் படம் பண்ண மாட்டேன். என் அடுத்த படங்கள்ல நிச்சயமா யுவன் இருப்பார். "
அடுத்த ப்ளான் என்ன?
“மூணு கதை காத்திட்டு இருக்கு. இனிமே கேப் விழுந்திட கூடாதுனு கவனமாவே இருக்கேன்.
அடுத்த படத்துக் கான வேலைகள் இன்னும் ரெண்டு மாசத்துல ஆரம்பி க்கும். அதுல அதர்வா வுக்கு ஒரு கதை ப்ளான் பண்ணி ருக்கேன்.
ஆனா, யுவன் மூணு படத்துலையும் இருப்பார். 'செம போத ஆகாத' படத்தை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வாங்கி ட்டாங்க.
Thanks for Your Comments