கீழத்தஞ்சை ஊர்களான கொடிக்கல் பாலயம், அடியக்க மங்கலம், ஆழியூர், மஞ்சக் கொல்லை, வவ்வலடி, திட்டச்சேரி மற்றும் சுற்றுப்புற அனைத்து ஊர்களிலும் மிகவும் பிரபலமான பெயர் செல்லக்கனி!
மேலே குறிப்பிட்ட ஊர்களில் உள்ள வீடுகளில் நடக்கும் திருமண மற்றும் அனைத்து விஷேச நிகழ்ச்சிகள் நடக்கும் நேரங்களில் சீர் வரிசைகளில் கொடுக்கப்படும் பனியார வகைளை ஒரு காலத்தில் வீடுகளிலேயே சுட்டு கொடு ப்பார்கள்.
இன்று இந்த அவசர உலகில் அதற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லை. இதை நன்கு உணர்ந்த செல்லக்கனி பண்டைய காலம் முதல் தொன்று தொட்டு கீழத்தஞ்சை மக்களால் மட்டுமே செய்யப்படும்
பனியாரமான அலியதிரம், நானாகத் தான், சீனிவாடா, ஹஜுறான், இஞ்சி கொத்து, தம்ரோட்டு, சுருள் பனியான், பதுரு பணியான்
இன்னும் பாரம் பரியமிக்க அனேக வகை பனியார வகைகளை அதே சுவையுடன் செய்து கொடுத்து அசத்தி வருகிறார். செல்லக்கனி ஒரு திரு நங்கை என்றால் நிச்சயம் நீங்கள் ஆச்சர்யப் படுவீர்கள்.
மிகவும் சிரமப்பட்டு இந்த தொழிலை கற்று செய்து வரும் செல்லக்கனி கஷ்ட நிலையிலுள்ள 25 க்கும் அதிக மானோருக்கு வேலை கொடுத்து பராமரித்தும் வருகிறார்.
மிகவும் இரக்க மனம் கொண்ட செல்லக்கனி செய்து வரும் உதவி களை பிறர் சொல்லி கேட்டால் நம் மனம் நிச்சயம் உருகி விடும்.
ஏறத்தாழ 53 வயதை கடந்து விட்ட நிலையில் மாதம் ஒன்றுக்கு மூன்று லட்சத்திற்கும் மேல் சம்பாதிக்கும் இவர்,
அதன் பெரும் பகுதியை ஏழை, எளிய மக்களுக்கும் தன்னிடம் பணி செய்பவருக்கும் செலவு செய்து விடுகிறார்.
மிகவும் வசதியான வாழ்க்கை கார், டெலிவரி வேன் என பல வசதிகள் இருந்தும் மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
திரு நங்கை என்றாலே மிகவும் கீழ்நோக்குடன் பார்க்கப்பட்டு வரும் இந்த கால கட்டத்தில் கடந்த 15 வருடங்களாக வெற்றி கரமாக
இந்த தொழிலை செய்து பிறருக்கும் உதவி வரும் செல்லக்கனி மிகவும் பாராட்டுக்கு உரியவர்
Thanks for Your Comments