கந்து வட்டி கொடு மைக்கு ஆளான இசக்கி முத்து உடன் காவல் துறையினர் பேசிய பரபரப்பு ஆடியோ வெளியாகி யுள்ளது.
காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தை களுடன்
திங்கட் கிழமை யன்று மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு வந்தனர். குழந்தைகள்
மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து தங்கள் மீதும் தீ வைத்துக் கொண்டனர்.
இதில் சுப்புலட்சுமி, இரண்டு குழந்தைகள் உடல் கருகி உயிரி ழந்து விட்டனர். இசக்கி முத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக் கப்பட் டுள்ளார்.
கந்து வட்டி கொடுமை பற்றி 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என்பதே இசக்கி முத்து உறவினர் களின் புகார்.
இதன் காரண மாகவே குடும்ப த்துடன் தீக்குளித்து தற்கொலை செய்ய இசக்கி முத்து முயற்சி செய்ததாக அவரது சகோதரர் குற்றம் சாட்டி யுள்ளார்.
இந்த சம்பவம் தொடர் பாக முக்கிய குற்ற வாளியான முத்து லட்சுமி என்பவரை கைது செய்து
நெல்லை குற்றவியல் நடுவர் மன்ற எண் 1 ல் நீதி துறை நடுவர் ராமதாஸ் முன்பு ஆஜர் படுத்தி நவ.7 வரை
நீதிமன்ற காவலில் கொக்கிர குளம் பெண்கள் கிளை சிறை யில் அடைத் துள்ளனர்.
இதனி டையே இசக்கி முத்து உடன் காவல் துறையினர் உரை யாடிய பரபரப்பு ஆடியோ வெளியாகி யுள்ளது.
அதில் இசக்கி முத்து அவரது மனைவி சுப்புலட்சுமி ஆகியோரை விசாரணை க்கு ஆஜராகு மாறு போலீசார் கூறுவது பதிவாகி யுள்ளது.
எதற்காக இந்த ஆடியோ பதிவு செய்யப் பட்டது என்பது பற்றிய தகவல் வெளியாக வில்லை.
Thanks for Your Comments