கந்து வட்டி கொடுமையால், கணவன், மனைவி, இரண்டு பெண் குழந்தைகளுடன், நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தீக்குளித்தனர்.
'சட்டத்தை மீண்டும் கடுமையாக அமல் படுத்த வேண்டும்' என, பொது மக்கள் வலி யுறுத்தி உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், கடைய நல்லுார் அருகே, காசிதர்ம த்தைச் சேர்ந்தவர் இசக்கி முத்து, 29; கூலித் தொழிலாளி.
மனைவி சுப்புலட்சுமி. இவ ர்களுக்கு மதி சாருண்யா, 4, மற்றும் ஒன்றரை வயதில், அக் ஷய ப்ரணிகா என்ற, இரண்டு பெண் குழந்தைகள்.
இசக்கி முத்து, குடும்ப தேவைக் காக, அதே பகுதியில் வசிக்கும் முத்து லட்சுமி என்பவ ரிடம், இரண்டு ஆண்டு களுக்கு முன், கந்து வட்டிக்கு, 1.45 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்.
புகார்
இருப்பினும், மேலும் வட்டியும், அசலும் தர வேண்டும் என, முத்து லட்சுமி கேட்டுள்ளார். இந்த பிரச்னை குறித்து, அச்சன் புதுார் போலீசில், இசக்கி முத்து புகார் அளித்தார்.
போலீசார் உரிய விசாரணை நடத்தாத தால், நெல்லை கலெக்டர் அலுவல கத்தில், திங்கள் கிழமை குறைதீர் கூட்டங் களில், ஏற்கனவே மனு அளித்தார்.
இசக்கி முத்து தரப்பினர், புகார் கூறினர். நேற்று முன் தினமும், முத்து லட்சுமி க்கு ஆதரவாக பணம் வசூல் செய்து தரும்,
ஓய்வு பெற்ற போலீஸ்காரர் ஒருவர், இசக்கி முத்து வீட்டிற்கு வந்து, மிரட்டி சென்று ள்ளார்.
அலறல்
இதனால், மனம் உடைந்த இசக்கி முத்து, நேற்று காலை, குறைதீர் கூட்டம் நடக்கும் நெல்லை கலெக்டர் அலுவல கத்திற்கு, கையில் மண்ணெ ண்ணெய் கேனுடன் வந்தார்.
மனைவி, குழந்தை களையும் உடன் அழைத்து வந்திருந்தார். வழக்கமாக, கலெக்டர், 11:௦௦ மணிக்கு வருவார். அதன் பின், மனு கொடுப்போர், வரிசையில் நின்று அளிப்பர்.
தீ உடல் முழுவதும் பரவியதும், நால்வரும் அங்கு மிங்குமாக அலறிய படி ஓடி விழுந்தனர்.அதிர்ச்சி அடைந்த கலெக்டர் அலுவலக ஊழியர்கள், போலீசார், அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர்.
அவர்கள் மீது தண்ணீரை ஊற்றியும், மண்ணை அள்ளி வீசியும், தீயை அணைத்தனர்.
பின், போலீஸ் வாகனத்தில் ஏற்றி, நெல்லை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, தீக்காய சிகிச்சை பிரிவில் அனுமதி த்தனர்.
குறைதீர் கூட்டத்திற்கு வந்த கலெக்டர், சந்தீப் நந்துாரி, தகவல் அறிந்து, மருத்துவ மனைக்கு சென்று, சிகிச்சை பெறுவோரை பார்த்தார்.
வழக்கு பதிவு
'பொது மக்கள், கந்து வட்டி கும்பலிடம் பணம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
பலத்த தீக்காய த்துடன் சிகிச்சை பெற்ற இசக்கி முத்து, அவரது மனைவி சுப்பு லட்சுமியிடம், நெல்லை மாஜிஸ் திரேட் கார்த்திகேயன் விசா ரித்தார்.
அவர்கள் கூறிய தகவல்களை, வாக்கு மூலமாக பதிவு செய்து கொண்டார். தீவிர சிகிச்சை அளித்தும், சுப்பு லட்சுமி, குழந்தைகள், மதி சாருண்யா, அக் ஷய ப்ரணிகா ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.
இசக்கி முத்துவுக்கு சிகிச்சை அளிக்கப் படுகிறது. சம்பவம் குறித்து, நெல்லை போலீசார் விசாரி த்தனர்.
இசக்கி முத்து தரப்பினருக்கு மிரட்டல் விடுத்த, கந்துவட்டி முத்து லட்சுமி, அவரது கணவர் தளவாய் ராஜ்,
18 சதவீதம்
கடந்த, 2001, 2002ம் ஆண்டு களில், தமிழக த்தில் கந்து வட்டி தொல்லை அதிகரி த்தது. வட்டிக்கு கடன் கொடுத் தவர்கள்,
கடனை திரும்ப வசூலிக்க, அப்பாவிகள் மீது குண்டர் களை ஏவி எடுத்த தடாலடி நடவடிக் கைகளால், பலர் தற்கொலை செய்தனர்.
இதையடுத்து, அப்போது முதல்வ ராக இருந்த ஜெயலலிதா, 2003ம் ஆண்டு, நவ., 14ல், கந்து வட்டி தடை சட்டத்தை கொண்டு வந்தார்.
இந்த சட்டத்தின் படி, ஆண்டுக்கு, 18 சதவீதத்திற்கு மேல் வட்டி வசூலிப் பவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் கடுங்காவல் சிறை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடியும்.
இதனால், கந்து வட்டி கும்பலின் ஆதிக்கம் கட்டுக்குள் வந்தது. 2006ல் ஆட்சிக்கு வந்த, தி.மு.க., இந்த சட்டத்தை கண்டு கொள்ள வில்லை.
தற்போது, சில ஆண்டுகளாக கந்து வட்டி கொடூரம், தமிழகத்தில் அதிகரித் துள்ளது. இந்த கொடூரத் திற்கு, நெல்லையைச் சேர்ந்த, மூன்று பேர் நேற்று பலியாயினர்.
எனவே, 'கந்து வட்டி தடை சட்டத்தை மீண்டும் கடுமை யாக அமல் படுத்த வேண்டும்' என, தமிழக அரசுக்கு, பொது மக்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.
கந்து வட்டி வசூலி த்தால் மூன்றாண்டு சிறை
கந்து வட்டி தடை சட்டம் என, அழைக்கப் பட்டது. அதே ஆண்டு, ஜூன், 3 ல், அச்சட்டம் அமலுக்கு வந்தது.
* தினசரி வட்டி, நேர வட்டி, கந்து வட்டி, மீட்டர் வட்டி, தண்டல் என அழைக்கப்படும், இந்த வட்டி வசூலுக்கு, சட்டத்தில் தடை விதிக்கப் பட்டுள்ளது
* கடன் வாங்கியவரோ, அவரது குடும்பத் தினரோ தற்கொலை செய்து கொண்டால், அந்த சம்பவத்து க்கு முன்,
அவர்களுக்கு தொல்லை கொடுக்கப் பட்டது நிரூபிக்கப் பட்டால், கடன் கொடுத்தவர், தற்கொலைக்கு துாண்டியதாக கருத முடியும்.
Thanks for Your Comments