கந்து வட்டி பிரச்சினை காரணமாக தீ குளித்த இசக்கி முத்து இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் தீ குளித்து தற்கொலை செய்து கொண்ட வர்களின் எண்ணிக்கை 4 ஆக உயிரிழந் துள்ளது.
காசி தர்மத்தைச் சேர்ந்த இசக்கி முத்து சுப்புலட்சுமி தம்பதியர் தங்களின் இரண்டு குழந்தைகளுடன் இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்திற்கு வந்தனர்.
தங்களின் கைகளில் வைத்திருந்த மண்ணெண் ணையை குழந்தைகள் உடம்பில் ஊற்றி விட்டு தங்களின் உடம்பில் ஊற்றிக் கொண்டு தீ வைத் தனர்.
இதனைக் கண்டு அங்கிருந் தவர்கள் அதிர்ச்சி யடைந்தனர். சுற்றியிருந் தவர்கள் மண்ணை போட்டு தீயை அணைத்தனர். அங்கிருந்த வாகனத்தில் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீ குளித்த 4 பேரும் படுகாயங் களுடன் சிகிச்சை க்காக பாளையங் கோட்டை அரசு மருத்துவ மனையில் அனு மதிக்கப் பட்டனர்.
இதில் திங்கட் கிழமை யன்றே சுப்புலட்சுமியும், இரண்டு குழந்தைகள் மகள்கள் மதி சரண்யா, அட்சய பரணிகா ஆகியோர் உயிரி ழந்தனர்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படு த்திய இந்த சம்பவம் கந்து வட்டி கொடுமை க்கு எதிராக பலரையும் குரல் கொடுக்க வைத்தது.
இந்த நிலையில் இன்று பாளையங் கோட்டை மருத்துவ மனை யில் சிகிச்சை பெற்று வந்த இசக்கி முத்துவும் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார்.
கந்து வட்டி கொடுமையால் தீயின் கோர பசிக்கு பலியான வர்களின் எண்ணி க்கை 4 ஆக உயர்ந் துள்ளது.
Thanks for Your Comments