இன்டர்நெட் சிட்டிசன் களுக்கு ஆசான் கூகுள் என்றால், நண்பன் ஃபேஸ்புக் தான். வாட்ஸ்அப், இன்ஸ்டா கிராம், ஸ்னாப்சாட் என இன்று நெட்டிசன் களுக்கு ஏகப்பட்ட ஆப்ஷ ன்கள் இருக்கி ன்றன.
ஆனால், சில ஆண்டு களுக்கு முன்னர் ஃபேஸ்புக் தான் நண்பர் களுடன் உரையாட ஆஸ்தான தூதுவர்.
இன்றைக்கு போட்டோ ஷேரிங் கிற்கென ஒரு ஆப், மெசேஜ் செய்வ தற்கு ஒரு ஆப், வீடியோ சாட்டிற்கு ஒரு ஆப் என அத்தனை க்கும் தனித்தனி சேவைகள் உருவாகி விட்டன.
ஆனால், இன்னமும் கூட, பலபேருக்குப் புதிய நண்பர் களைக் கண்டறிய, நண்பர் களுடன் தினமும் உரையாட, குழுவாக இயங்க,
புகைப் படங்களைப் பகிர்ந்து கொள்ள, கருத்து களை வெளிப் படுத்த என 'ஆல் இன் ஆல் சோஷியல் மீடியாவாக' இருப்பது ஃபேஸ்புக் தான்.
ஃபேஸ்புக் டைம் லைனில் பிரவுஸ் செய்வதே பொழுது போக்காக இருந்த காலம் போய், தற்போது போர் அடிக்கும் நிலையே வந்து விட்டது.
என்ன காரணம்?
புதிய ஸ்டேட்டஸ் வசதிகள், மொபைலு க்கு என சூப்பர் ஸ்பெஷல் ஆப், இணைய வேகம் குறைவான மொபை லுக்கு ஃபேஸ்புக் லைட், நண்பர் களுடன் உரையாட லைவ் ஆப்ஷன், லைக் உடன் சேர்ந்த ரியாக்ஷன்கள் எனக் காலத் திற்கு ஏற்ப,
தன்னை ட்ரெண்ட்டி யாக வைத்துக் கொள்ள தொடர்ந்து முயன்று வருகிறது ஃபேஸ்புக். ஆனாலும் கூட, முன்னர் இருந்ததைப் போல சுவாரஸ் யமாக இருப்ப தில்லை.
இதற்கு பல்வேறு காரணங் களைக் கூற முடியும். முதலாவது, ஃபேஸ்புக் விளம் பரங்கள். சில ஆண்டு களுக்கு முன்னர் வரை, நம்முடைய நண்பர் களின், உறவினர் களின் பதிவுகள் அதிக மாகவும், மற்ற செய்திகள் குறை வாகவும் இருக்கும்.
ஆனால், தற்போது நம்முடைய நண்பர் களின் பதிவுகளை விடவும். விளம் பரங்களே அதிகம் நம் டைம் லைனை ஆக்கிர மித்திருக் கின்றன.
2G இன்டர்நெட் காலத்தில் ஸ்டேட்டஸ் ட்ரெண்ட் என்றால், 4G யுகத்திற்கு வீடியோக்கள். இந்த வீடியோக் களை ஃபேஸ் புக்கும் ஊக்கு விக்கவே, தற்போது பதிவுகள், விளம் பரங்கள், செய்திகள்
என நிறைய வீடியோக்கள் தாறு மாறாக டைம் லைனில் வந்து குவிந்து கிடக்கின்றன. இதில் தேவை யற்ற செய்திகள், விளம் பரங்கள் அதிகளவில் வருவது தான் முதல் சிக்கல். அடுத்தது, நியூஸ்ஃபீட் அல்காரிதம்.
நம்முடைய டைம் லைனை விருப்ப த்திற்கு ஏற்ப மாற்றி யமைப்ப தற்காகப் பல்வேறு அல்காரிதம் களைப் பயன் படுத்துகிறது ஃபேஸ்புக்.
ஆனால், இது எல்லோரு க்கும் சரியாக இருப்ப தில்லை. முதலில் நாம் எதுவும் செய்யாமலே, நமக்குப் பிடித்த விஷயங் களைக் காட்டிக் கொண்டிருந்த ஃபேஸ்புக் இன்று நம்முடைய டைம் லைனை நம்மையே முடிவு செய்யச் சொல்கிறது.
மேலும், தற்போது ட்விட்டர், இன்ஸ்டா என நிறைய சமூக வலை தளங்கள் கலக்கத் தொடங்கி விட்டதால், ஃபேஸ்புக்கின் மீதான ஈர்ப்பும் குறைந்து விட்டது.
இதனால் பலரும் "ஃபேஸ்புக் போர் அடிக்கிறது" என ஸ்டேட்டஸ் தட்டத் தொடங்கி விட்டனர். "ஃபேஸ்புக் போர் அடிக்கிறதா?" என்ற கேள்விக்கு 78% பேர் ஆம் எனப் பதில் அளித்து ள்ளனர். "என்ன காரணம்?"
என்பதற்கு 50 %-க்கும் மேலானோர் ஃபேக் நியூஸ் மற்றும் நம்பக மற்ற செய்திகள் அதிகம் வருவது தான் காரணம் எனக் கூறி யுள்ளனர்.
கூகுள், ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் என எல்லாப் பக்கமும் ஃபேக் நியூஸ் பிரச்னை இருந் தாலும், ஃபேஸ் புக்கில் அதன் தாக்கம் அதிக மாகவே இருக்கிறது. அதனை அறவே வெறுக் கின்றனர் பயனாளர்கள்.
ஃபேஸ் புக்கில் பலரும் பயன் படுத்தும் ஒரு விஷயம் நியூஸ் ஃபீட். இதற்கடுத்து மெசெஞ்சர். ஆனால் இவற்றைத் தாண்டியும் ஃபேஸ் புக்கில் உலாவ நிறைய இடங்கள் இருக்கி ன்றன.
டைம் லைனின் இடது புறத்தில் இருக்கும் Explore பகுதியில் On this Day தொடங்கி Recommendations வரை பல்வேறு வசதிகள் இருக்கி ன்றன. இவற்றை அதிக முக்கியத் துவம் இல்லாத பகுதிகள் என நாம் நினை ப்போம்.
ஆனால் பல நிறுவனங் களுக்குக் கிலியை உண்டாக்கி யிருக்கிறது இதில் இருக்கும் Explore Feed. காரணம் இது தான். இலங்கை, செர்பியா, பொலிவியா உள்பட 6 நாடுகளில் நியூஸ்ஃபீட் அல்காரி தமை மாற்றி யிருக்கிறது ஃபேஸ்புக்.
இதன்படி, பயனா ளர்களின் டைம் லைனில், ஃபேஸ்புக் பக்கங்க ளிலிருந்து (FB Pages) பதிவிடும் செய்திகள் தெரியாது. அவை தனியாக Explore Feed-ல் மட்டுமே தெரியும். நண்பர்கள் மற்றும் உறவி னர்களின் பதிவுகள் மட்டுமே
பயனா ளர்களின் சாதாரண நியூஸ் ஃபீடில் தெரியும். அதே சமயம் பணம் கட்டி விளம்பரம் செய்தால், பயனாளர் களின் டைம் லைனில் தெரியும்.
தற்போது சோதனை ஓட்டமாக மட்டுமே இது செயல் படுத்தப் பட்டிருக் கிறது. ஆனால், இந்த மாற்றத் தால் அந்நாட்டில் இருக்கும் பல ஃபேஸ்புக் பக்கங் களின் வீச்சு வெகுவாகக் குறைந்து விட்டது.
இதனால் தளத்தின் டிராஃபிக்கும் பாதிக்கப் பட்டிருக் கிறது. பல நிறுவ னங்கள் தங்கள் ஃபேஸ்புக் பக்கம் மூல மாகவே, தங்கள் தளத்திற்கு வாசகர் களை ஈர்த்து வருகின்றன.
ஆனால் இப்படி ஃபேஸ்புக் அல்காரிதம் மாறிய தால், இனி அவை பணம் கொடுத்து மட்டுமே விளம்பரம் செய்யப் படும் நிலை க்குத் தள்ளப்படும்.
இதனால் பெரிய நிறுவன ங்களுக்கு அதிகள வில் பாதிப்புகள் இருக்காது. ஆனால், ஃபேஸ்புக் மூல மாகவே, தங்கள் நிறுவ னத்தை வளர்த்து வரும் சின்னச் சின்ன நிறுவனங் களுக்குப் பெரியளவில் பாதிப்புகள் இருக்கும்.
இது நாள் வரை, இலவச மாக மட்டுமே ஃபேஸ் புக்கைப் பயன் படுத்திய நிறுவ னங்கள், பணம் செலுத்த வேண்டிய நிர்பந்தமும் உண்டாகும்.
இது சரியான அணுகு முறை இல்லை எனப் பல்வேறு இணைய ஊடக வியாளர் களும் கருத்துத் தெரிவித்து வரு கின்றனர்.
அதே சமயம் "வணிகம் என வரும் போது, இலவச மான சேவை களை நம்பி மட்டுமே பிசினஸ் மாடலை அமைக்கக் கூடாது.
அப்படிச் செய்தால், இது போன்ற சிக்கல் களை எதிர் கொள்ள நேரிட லாம்" என்கி ன்றனர் இணைய ஆர்வ லர்கள். இந்நிலை யில், "இந்த வசதி தற்போது ஆறு நாடுகளில் மட்டுமே சோதனை செய்யப் படுகிறது.
மற்ற நாடு களுக்கு விரிவு படுத்தும் எண்ணம் எதுவு மில்லை" எனக் கூறியி ருக்கிறார் ஃபேஸ்புக் நிர்வாகி ஒருவர்.
இப்படி, நாம் லைக் செய்த பக்கங் களில் இருந்தே, நம் டைம் லைனுக்குச் செய்திகள் வராமல் போவது, அதற் காகத் தனிப் பகுதிக்குச் சென்று பார்க்க வைப்பது போன் றவை எல்லாம் மேலும் மேலும் பயனாளர் களைச் சலிப் பூட்டும் விஷயங் களே.
எனவே, வேறு மாதிரியான மாற்றங் களை ஃபேஸ்புக் கொண்டு வர வேண்டும். மார்க்கிற்கு ஃபேஸ்புக் யூசர்ஸ் அனுப்ப விரும்பும் மெசேஜ் இது தான்.
Thanks for Your Comments