எங்கள் வாழ்க்கையே சிவப்பு சொல்கிறார் பாலியல் தொழிலாளி !

0
முன்னாள் பாலியல் தொழி லாளியான சப்ரீனா வைலிஸ் இன்னாள் பெண்ணுரிமைப் போராளி. நியூசிலாந்தில் பாலியல் தொழில் குற்றப் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று போராடியவர் சப்ரீனா.
எங்கள் வாழ்க்கையே சிவப்பு சொல்கிறார் பாலியல் தொழிலாளி !
ஆனால் அவரது கோரிக்கை நிறை வேற்றப்பட்ட சூழ்நிலையில் தற்போது மனம் மாறி விட்டார் சப்ரீனா.
பாலியல் தொழிலாளி யான பெண்களை பயன்படுத்தும் ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தற்போது முன் வைக்கிறார்.

சப்ரீனாவின் 12 வயதாக இருந்த போது, அவரது அப்பா தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகு வாழ்க்கையே தடம் புரண்டது.

இரண்டு ஆண்டுகளில் தாய் மறுமணம் செய்து கொள்ள, அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருந்து  நியூசிலாந்தில் வெலிங்டன் நகருக்கு இடம் பெயர்ந்தது. 
ஊர் மாறியதும் சப்ரீனாவின் வாழ்க்கையும் மாறியது. சப்ரீனாவிடம் நேரிடையாக உரையாடிய எழுத்தாளர் ஜூலி பிந்தல், சப்ரீனாவின் கோணத்தில் அவரது வாழ்க்கையைக் கூறுகிறார்.

சப்ரீனாவின் கதை
சப்ரீனாவின் கதை
இளம் பருவத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்த தில்லை. எனது மாற்றுத் தந்தை மிகவும் கொடுமைக்காரர். அந்நாட்களில், என்னிடம் பேசுவதற்குக் கூட ஆளில்லாமல் தவித்தேன்.

தொழில் முறை நடனக் கலைஞராக விரும்பிய நான், பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் பாலே நடன வகுப்பில் சேர்ந்தேன். 
லிம்ப்ஸ் என்ற பிரபல நடனக்குழு எனக்கு நடனம் கற்றுக் கொடுத்தது. ஒருநாள் பள்ளியில் இருந்து ஒரு பூங்கா வழியாக வீட்டிற்கு சென்று கொண்டி ருந்தேன். 

அப்போது ஒருவர் 100 டாலர் பணத்தைக் கொடுத்து, பாலியல் தொழிலுக்கு அழைத்தார். நானும் ஒப்புக் கொண்டு சென்று விட்டேன்.

நடனக் கலைஞராக விரும்பிய நான், சில நாட்களிலேயே வீதிக்கு வந்து விட்டேன்.

பள்ளிச் சீருடையில் இருந்த நான் சிறுமி என்பது பாலியல் தொழிலுக்கு அழைப்பு விடுத்த வருக்கு தெரியாது என்று கூற முடியாது.
அவர் கொடுத்த, 100 டாலர் பணம் கையில் இருந்த தைரியத்தில் ஆக்லாந்துக்கு சென்று, அங்கு ஒய்.எம்.சி.ஏவில் அறை எடுத்துத் தங்கினேன்.

போலிசாரின் தேடுதல் வேட்டை
போலிசாரின் தேடுதல் வேட்டை
ஒருவரிடம் பண உதவி கேட்பதற்காக தங்கும் விடுதிக்கு அருகில் இருந்து பொதுத் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். 

அவரின் தொலைபேசி பிசியாக இருந்தது. எனவே வெளியே நின்று கொண்டிருந்தேன். அந்த வழியாக சென்று கொண்டிருந்த போலீசார் என்னிடம் விசாரித்த போது உண்மையைச் சொன்னேன்.

தொலை பேசியை யாரும் பயன்படுத்தாத போது நீ சொல்வதை எப்படி நம்புவது என்று சந்தேகத் துடன் கேள்வி கேட்ட அவர்கள், ஆணுறை வைத்திருக் கிறேனா என்று சோதனை செய்தார்கள்.

நான் பாலியல் தொழிலாளி என்றே போலீசார் முடிவு செய்து விட்டார்கள்.அதற்காக அவர்களை தவறு சொல்ல முடியாது.

ஏனெனில் விபச்சாரத்திற்கு பிரசித்தி பெற்ற காரைன்கைப் சாலைக்கு அருகில்தான் ஒய்.எம்.சி.ஏ தங்கும் விடுதி இருந்தது.

மூத்தவரின் அறிவுரை
மூத்தவரின் அறிவுரை
போலீஸ்காரர்கள் என்னை சுவரில் சாய்ந்து நிற்க வைத்து சோதனை செய்த போது பயமாக இருந்தது. ஆனால் அப்போது தான் விபரீதமான யோசனை எனக்குள் தோன்றியது.
கையில் பணமே இல்லை, தொலை பேசியில் உதவி கேட்பவர் பணம் இல்லை என்று சொல்லி விட்டால் தெருவில் தான் நிற்க வேண்டும்.

நான் பாலியல் தொழில் செய்கிறேனா என்று சந்தேகத்தில் என்னை சோதனை செய்கிறார்கள்.

ஏன் பாலியல் தொழிலிலேயே ஈடுபடக் கூடாது?
ஏன் பாலியல் தொழிலிலேயே ஈடுபடக் கூடாது?
போலீசார் சென்ற திசைக்கு எதிர்புறமாக இருந்த பாலியல் தொழிலுக்கு பிரசித்தி பெற்ற காரைன்கைப் சாலை செல்லும் பாதையை நோக்கி நடந்தேன்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த ஒரு பெண்ணிடம் ஆலோசனை கேட்டேன். இந்தத் தொழிலில் ஈடுபடுவதற்கு இரண்டு அறிவுரை களை அவர் சொன்னார்.

மகப்பேற்றின் போதான மரணத்தை தடுக்க உதவும் ஆணுறை ஆணுறை களை என்னிடம் கொடுத்து தொழிலுக்கு புதிதான எனக்கு, வாடிக்கை யாளர்க ளிடம் கட்டணங்கள் நிர்ணயிப்பது, 

அவர்களை எதிர் கொள்வது ஆகியவை எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்.
வாடிக்கை யாளருக்கு கொடுக்கத் தயாராக இருக்கும் சேவைகள் என்ன என்பதை முன் கூட்டியே அவர்களிடம் கூறி விட வேண்டும் என்றும்,

எனது விருப்பத்திற்கு மாறான ஒன்றைச் செய்யக் கட்டாயப் படுத்தினால் சண்டையிடாமல் அதை தவிர்க்க வேண்டும் என்பது அவர் சொன்ன இரண்டாவது அறிவுரை. கேட்டதோ உதவி… கிடைத்ததோ ஆணுறை

அந்த பெண்மணி மிகவும் நல்லவர்.
அந்த பெண்மணி மிகவும் நல்லவர்.
அங்கு இருந்தவர் களிலேயே வயது குறை வானவராக இருந் தாலும், பல ஆண்டுகளாக அங்கேயே இருந்தார்.

இரண்டு ஆண்டுகள் நான் காரைன்கைப் சாலையில் வசித்த பிறகு, 1989இல் கிரஸ்ட்சர்ச்சில் உள்ள நியூசிலாந்து புராஸ்டிட்யூட்ஸ் கலெக்டிவ் (NZPC) என்ற அமைப்பிற்கு சென்று விட்டேன்.
தலைமுடியை அறுத்து சித்ரவதை செய்து நிர்வாணமாக மிதக்க விட்ட ரூபஸ்ரீ சடலம் !
பாலியல் தொழிலில் இருந்து வெளியேற விரும்பி உதவி தேடிய எனக்கு கிடைத்தது, என்னை மீண்டும் அந்தக் குழியிலேயே அழுந்தச் சொல்லும் ஆணுறைகளே!

வழக்கமாக வெள்ளிக் கிழமை இரவுகளில் நடை பெறும் வொயின் மற்றும் சீஸ் சமூக விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வரும்.

அந்த விருந்து களில் பாலியல் தொழில் தொடர்பான விஷயங்கள் பற்றியும் அதில் ஈடு பட்டிருப் பவர்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றியும் பேசப்படும்.

இதில் விபரீதமான விஷயம் என்ன வென்றால், பிற தொழில் களைப் போன்றதே பாலியல் தொழிலும் என்றே பேசப்படும். 

பாலியல் தொழில் சரியானதே என்று பாலியல் தொழிலாளிகள் நம்ப வைக்கப் படுவார்கள்.

உடல் வியாபாரம்
உடல் வியாபாரம்
மசாஜ் பார்லர் ஒன்றில் ஒருங்கிணைப் பாளராகப் பணியில் சேர்ந்தேன். தரகர்கள் உட்பட பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள யாரையும் குற்றவாளி களாக பார்க்கக் கூடாது. 

பாலியல் தொழில் தவறானது அல்ல என்ற பிரச்சார த்தை மிகுந்த உற்சாகத் துடன் முன்னெடு த்தேன்! புரட்சி ஒன்று மலரப்போவதாக கற்பனை செய்து மகிழ்ந்தேன்.
பாலியல் தொழிலை 'குற்றத்தொழில்கள்' என்ற பட்டியலில் இருந்து வெளிக்கொணர்வது பெண்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும் என்று நம்பினேன்.

எங்கள் கோரிக்கை வெற்றி பெற்று 2003இல் குற்றத் தொழில்கள் பட்டியலில் இருந்து பாலியல் தொழில் விலக்கப் பட்டது.

வெற்றியை கொண்டாட நியூசிலாந்து புராஸ்டிட் யூட்ஸ் கலெக்டிவ் ஏற்பாடு செய்த விருந்திலும் உற்சாகமாகக் கலந்து கொண்டேன்.

ஆனால் எனது மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நீடிக்க வில்லை, வெற்றி ஏமாற்றமாக, கானல்நீராக மாறியது.

பாலியல் தொழில் சட்ட பூர்வமான தொழில் என அனுமதித்த 'பாலியல் தொழில் சீர்திருத்த சட்டம்', பாலியல் தொழிலில் ஈடு பட்டிருந்த பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் என்று புகழ் பெற்றது.

தேவைப் படுபவர்க ளுக்கு பாதுகாப்பு கிடைக்க வில்லை இங்கிலாந்தில், உள்துறை விவகாரங் களை நிர்வகிக்கும் குழு, பாலியல் தொழிலைப் பற்றி பல்வேறு அணுகு முறை களுடன் ஆலோசனை செய்தது.
அதில் குற்றப் பட்டியலில் இருந்து பாலியல் தொழிலை நீக்குவதும் ஒரு அம்சமாக இருந்தது. ஆனால் நியூசிலாந்தில் இது ஒரு பிரச்சனையாகி விட்டது. 

இந்த சட்டத்தால் தரகர்களும், வாடிக்கையாளருமே பயனடைந் தார்கள். இந்தச் சட்டம், பெண்களுக்கு அதிக நன்மை களையும் உரிமைகளையும் வழங்கும். 
பாலியல் தொழில் செய்யும் பெண்களின் முதலாளி
பெண்கள் அதிகாரம் பெறுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் நடந்ததோ நேர் எதிராக இருந்தது. இந்த சட்டத்தின்படி, பாலியல் தொழில் செய்யும் பெண்களின் முதலாளி, 

வாடிக்கை யாளர் களுடன் "அனைத்தையும் உள்ளடக்கிய" ஒப்பந்த ங்களை செய்து கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, 
பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணை எப்படி வேண்டு மானாலும் தனது விருப்பப்படி கையாள லாம்.

"அனைத் தையும் உள்ளடக்கிய" என்ற அம்சம் சேர்க்கப் படாது என்று எங்களுக்கு முன்னர் உறுதி யளிக்கப் பட்டிருந்தது. 

ஏனென்றால், எதுபோன்ற பாலியல் சேவைகளை வழங்குவது அல்லது மறுப்பது மற்றும் விலை நிர்ணயம் செய்வது போன்ற வற்றை 

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் செய்ய முடியாது என்பதே "அனைத்தையும் உள்ளடக்கிய" என்பதன் பொருள்.

பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் பாதிக்கப் படக் கூடாது, அவர்களுக்கு உரிமைகளும் அதிகாரங் களும் தேவை என்பது தான், 
குற்றப் பட்டியலில் இருந்து பாலியல் தொழிலை நீக்கும் கோரிக்கை யின் அடிப்படையே.ஆனால், அந்த அடிப்படைப் பாது காப்பையே இந்தச் சட்டம் வழங்க வில்லை.

வேலை கோரி சென்றேன்...
வேலை கோரி சென்றேன்...
நாற்பது வயதில் வெலிங்டனில் பாலியல் தொழில் நடத்தும் ஒரு விடுதியில் வேலை தேடிச் சென்ற எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
பெண் கருவுறாமைக்கான காரணங்கள் மற்றும் சிகிச்சைகள் !
அங்கு முதல் முறையாக பணிக்கு சென்றபோது, ஒரு அறையில் இருந்து ஒரு பெண் பயந்து போய் அழுதுகொண்டு ஓடி வந்தாள். 

அவளால் பேசவே முடிய வில்லை. காரணத்தை விசாரிக் காமல், திரும்பி வேலைக்கு செல் என்று அங்கிருந்த வரவேற்பாளர் கூச்சலிட்டார்.

அதிர்ச்சி யடைந்த நான், என்னுடைய பொருட் களை எடுத்துக் கொண்டு திரும்பி விட்டேன். வெலிங்டன் புராஸ்டிட் யூட்ஸ் கலெக்டிவ் அமைப் பிடம் இது பற்றி பேசினேன். 

இதில் நாம் என்ன செய்ய முடியும்? இது போன்ற கொடுமை களில் இருந்து பெண்களை பாதுகாக்க என்ன செய்ய லாம்? என்று பேசினேன்.

என்னுடைய கேள்வி முற்றிலு மாக புறக்க ணிக்கப் பட்டது. அதன் பிறகு அது வரை எனக்கு ஆதரவு கொடுத்து வந்த ஒரே அமைப் பாக இருந்த புராஸ்டிட் யூட்ஸ் கலெக்டிவ் அமைப்பில் இருந்து விலகி விட்டேன்.

என் கதை...
என் கதை
செல்வதற்கு எந்த இடமும் இல்லாமல் நிர்கதியாகத் தனித்து நின்றேன். 

இந்தத் தொழிலு க்கும், அந்த அமைப் பிற்கும் நானாகவே விரும்பித் தான் சென்றேன் என்றாலும், அந்த அமைப்பில் இருந்து தான் என்னுடைய தொழிலைத் தொடங் கினேன்.
நியூசிலாந்து புராஸ்டிட் யூட்ஸ் கலெக்டிவ் அமைப்பில் செய்தி ஊடகக் காட்சி களைக் சேகரி ப்பதும் என்னுடைய வேலை களில் ஒன்றாக இருந்தது. 

அங்கு நான் படித்த ஒரு விடயம் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. பாலியல் தொழிலில் இருந்து வெளி யேறிய ஒருவர் காரண மின்றிக் கண்ணீர் விடுவதைப் பற்றிய செய்தி அது. 

பாலியல் தொழிலில் இருந்து வெளியேறும் வரை அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணர வில்லை.
காரணமே இல்லாமல் இந்த செய்தி அடிக்கடி என் மனதில் தோன்றும். என்னைப் போலவே அவரும் உணர்ந் திருக்கிறார் என்பது 

மிக தாமத மாகவே எனக்கு புரிந்தது. அதன்பிறகு நான் பாலியல் தொழி லில் ஈடுபடவே யில்லை.

பெண்களின் உரிமைகளுக்கான இயக்கம்
பெண்களின் உரிமைகளுக்கான இயக்கம்
பாலியல் தொழிலில் இருந்து 2011ஆம் ஆண்டில் விலகிய நான், புதிய வாழ்க்கையை துவங்கும் முடிவில் 

ஆஸ்திரேலி யாவின் கோல்ட் கோஸ்டுக்கு சென்று விட்டேன். ஆனால் குழப்பமும், மன அழுத்தமும் என்னை வாட்டின.
எனது அண்டை வீட்டில் இருப்பவர், இணைய தளத்தில் வெப்கேமரா மூலம் பாலியல் தொழில் செய்வ தற்கு அழைப்பு விடுத்தபோது, அதை கண்ணி யமாக மறுத்து விட்டேன்.

நான் பாலியல் தொழிலாளி என்று என் நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதா என்ன? என்னைப் பற்றி இவருக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரிய மடைந்தேன்.

கோரிக்கையை மறுத்த பிறகு அண்டை வீட்டுக் காரர் என்னை பார்க்கும் போதெல் லாம் அவமானப் படுத்து வார்.
பாலியல் தொழிலாளி என்று என் நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதா என்ன?
பெண்ணாக இருப்பது மட்டுமே இப்படி கூப்பிடு வதற்கு போது மான காரணம் என்றும் புரிந்துக் கொண் டேன்.

பெண் களையும், பெண்ணிய வாதிகளை யும் ஆன் லைனில் சந்தித்து உரையாடு கிறேன். பாலியல் தொழி லில் பாதிக்கப் பட்ட வர்கள் மற்றும் அடிமை களாக நடத் தப்படு பவர்களுக் காக பணி புரிகிறேன்.

பாலியல் தொழிலில் அடிமைப் படுத்தி வைத்தி ருக்கும் முறைக்கு எதிராக நடவடி க்கை எடுத்து வரும் பிரிட்டனின் உள் விவகாரத் துறையின் குழு, 
பாலியல் தொழில் தரகர் களை குற்ற வாளிகள் பட்டிய லிலும், தொழிலா ளிகளை குற்ற வாளிகள் அல்ல என்றும் வகைப் படுத்தி யிருக் கிறது.

மன உளைச்சல்

ஆஸ்திரேலியா வில் பெண்ணிய வாதிகள் கொண்ட குழுவை நிறுவியி ருக்கிறேன்.

ஒரு மாநாட்டி ற்கும் ஏற்பாடு செய்தேன்.
ஒரு மாநாட்டி ற்கும் ஏற்பாடு செய்தேன்.
ஆஸ்திரேலி யாவில் பல மாநி லங்கள் பாலியல் தொழிலை சட்டப் பூர்வமாக் கியுள்ள நிலை யில் 

முதலாவது அடிமை எதிர்ப்பு நிகழ் வாக கடந்த ஆண்டு மெல்போர்ன் பல்கலைக் கழகத் தில் நடை பெற்ற இந்த மாநாட்டை கூறலாம்.

1980 களின் மத்தியி லேயே பாலியல் தொழி லுக்கு சட்டப் பூர்வ தொழில் என்ற அந்தஸ்து வழங்கப் பட்ட போதிலும், அதற்கு எதிர்ப்பு களும் தொடர் கின்றன.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண் களின் நன்மைக் காக செயல் படத் தொடங்கிய போது, என்னுடைய புதிய வாழ்க்கை தொடங்கி விட்டதை உணர் ந்தேன்.

இதனால் உணர்வு சிக்கல் களில் இருந்து வெளியேறிய நான், இப்போது உடல் ரீதியாகவும், மனோ ரீதியாகவும் வலுவாகி விட்டேன்.

ஆனால், அதிர்ச்சி யளிக்கும் சம்பவத் திற்கு பிறகு ஏற்படும் மன உளைச்சல் (Post-traumatic stress disorder) நோயால் பாதிக்கப் பட்டிருக் கிறேன் என்பதை மருத்துவ பரிசோ தனைகள் தெரிவி த்தன.

நோய்க்கு எதிரான போராட்டம்
நோய்க்கு எதிரான போராட்டம்
பாலியல் தொழிலின் பரிசு நோய். அந்தத் தொழி லில் ஈடு பட்டிருந்த போது ஏற்பட்ட அழுத்தங் களை எல்லாம் அழுத்தி வைத்தி ருந்ததன் விளைவுகள் அந்த நோய்கள். 
பின் விளைவாக ஏற்பட்ட நோயில் இருந்து மீண்டு வருவதற் காக போராடி வருகிறேன்.

பாலியல் தொழிலில் ஈடு பட்டுள்ள பெண் களுக்கு விழிப் புணர்வு ஏற்படு த்தும் பணியில் ஈடுபடு வதும், என்னைப் போன்றே

இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்களுடன் இணைந்து பணியாற்றுவ துமே எனது நோய்க் கான சிறப்பான சிகிச்சையாக இருக்கும் என்று நம்பு கிறேன்.

இந்தத் தொழிலில் ஈடுபட்டு, பாதிக்கப் பட்டவர்க ளுக்கு ஆதர வாக குரல் கொடுக் காமல் மெளனம் காப்பவர் களுக்கு எதிராகவும் குரல் எழுப்பு கிறேன்.

பாலியல் தொழிலில் ஈடு படுங்கள் என்று ஊக்க மளிப்பதோ, இந்தத் தொழி லில் இருந்து வெளி யேறுங்கள் என்று அறிவுறுத் துவதோ என் நோக்கம் அல்ல. 
பிற பெண் களுக்கு உதவு வதற்காக என்னால் முடிந்த வற்றை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.
'த பிம்பிங் ஆஃப் பிராஸ்டிட் யூஷன்: 

அபாலிஷிங் த செக்ஸ் வொர்க் மித்' (The pimping of prostitution: Abolishing the Sex Work Myth) என்ற புத்தகத்தை எழுதியவர் ஜூலி பிந்தல்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings