இந்தியாவில் கோயில் கோயிலாக சென்று பிச்சை எடுத்து வாழப் போகிறேன் என்று ரஷ்ய சுற்றுலாப் பயணி தெரிவித் துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ (24) என்ற இளைஞர், காஞ்சி புரத்தில் உள்ள
குமர கோட்டம் கோயிலில் கடந்த 10-ம் தேதி பிச்சை எடுத்துக் கொண்டி ருந்தார்.
அவரை மீட்ட காவல் துறை யினர், பணம் கொடுத்து சென்னை யில் உள்ள ரஷ்ய தூதரக த்துக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அந்த இளைஞர் ரஷ்ய தூதரக த்துக்கு செல்லாமல் மாய மானார்.
இந்நிலை யில் சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் மற்றொரு கோயில் வாசலில்
அமர்ந்து பிச்சை எடுத்துக் கொண் டிருந்த அவரை, சிலர் அடையாளம் கண்டு பிடித்தனர்.
கோயில் வாசலில் பிச்சை எடுப்பது குறித்து கேட்ட போது, அவர் கூறிய தாவது:
இந்தியாவை எனக்கு மிகவும் பிடித்து ள்ளது. இங்குள்ள கோயிலில் கை நீட்டினால் எல்லோ ரும் பணம் கொடுக் கின்றனர்.
நான் ரஷ்யா செல்ல மாட்டேன். இந்தியா விலேயே இருக்கப் போகிறேன்.
என்னிடம் நிறைய பேர் பேசுகி ன்றனர். பணம் கேட்டால் உடனே கொடுக் கின்றனர்.
என்னுடன் செல்பி எடுக்க 10 ரூபாய் கேட்டால், உடனே கொடுத்து விடுகி ன்றனர். என்னை பேட்டி எடுக்க நீங் களும் பணம் கொடுக்க வேண்டும்.
நான் இந்தியா வந்த போது ரூ.4 ஆயிரம் மட்டுமே வைத்தி ருந்தேன். இப்போது அதை விட அதிக மாக பணம் வைத்தி ருக்கிறேன்.
இந்தியா வில் பிச்சை எடுத்து வாழ முடிவு செய்திரு க்கிறேன். அடுத்த தாக பெங்களுரு செல்ல திட்ட மிட்டிருக் கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெர்ட்னி கோவ் எவ்ஜெனீ இந்தியா வருவ தற்கு எந்த குறிப்பிட்ட நோக்க மும் கிடையாது.
மனம் போன போக்கில் சுற்றுவது மட்டுமே அவரது இலக்கு.
பெர்டிகோவின் கைகளில் முன்ன தாக அவர் சென்று வந்த நாடு களின் கொடிகளைப் பச்சைக் குத்தி யுள்ளார்.
சீனா, தாய்லாந்து, கம்போடியா நாடு களுக்கு அடுத்த தாக இந்தியக் கொடியை அவர் பச்சை குத்தி யுள்ளார்.
கோயில் வாசலில் ரஷ்ய நாட்டுக்காரர் பிச்சை எடுப்பதை அறிந்து மேற்கு மாம்பலம் போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவரது ஆவணங் களை சரி பார்த்த போது, அவை அனைத்தும் சரியாக இருந்தன.
நவம்பர் 22-ம் தேதி வரை இந்தியாவில் தங்கி யிருக்க அவருக்கு விசா இருப்பதும் தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து பிச்சை எடுக்கக் கூடாது என எச்சரித்து போலீ ஸார் அவரை அனுப்பி வைத்தனர்.
இது குறித்து ரஷ்ய தூதரக அதிகாரி களிடம் கேட்ட போது, “பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ,
தூதரக த்துக்கு வந்து கேட்டால் மட்டுமே அவருக்கு உதவி செய்ய முடியும்.
இந்தியா வில் பெர்ட்னிகோவ் எவ்ஜெனீ பிச்சை எடுப்பது குறித்து அவரது பெற்றோரு க்கு தகவல் தெரிவித்து விட்டோம்.
அவர்கள், பெர்ட்னிகோவ் எவ்ஜெனீயை தொடர்பு கொண்டு பேசிய பின்னரும், பிச்சை எடுப்பதில் இருந்து அவர் பின் வாங்க வில்லை’ என்றனர்.
Thanks for Your Comments