கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள் (Some signs to know if the liver is damaged): உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கிய மான ஒரு உறுப்பு.
ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்கா விட்டால் (If the liver is not functioning properly,), உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப் பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப் பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன.
ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்க மாட்டோம்.
இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப் புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்து கின்றன.
மேலும் சரியான நேரத்தில் சாப் பிடாமல் இருந்தால், கல்லீர லில் கொழுப் புகள் தங்கி விடும். இப்போது கல்லீரல் பாதிக்கப் பட்டிருந்தால், என்னென்ன அறி குறிகள் இருக்கும் என்பதைப் பார்ப்போமா!!!
வாய் துர்நாற்றம்
கல்லீரலானது சரியாக இயங்க வில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனி யாவானது அதிகமாக உற்பத்தி செய்யப் பட்டிருக்கும்.
கரு வளையம் மற்றும் சோர்வான கண்கள்
கல்லீரல் சரியாக இயங்கா விட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கரு வளையங்கள் ஏற்பட்டு, சுருக்கங்களோடு காணப்படும்.
செரிமானப் பிரச்சனை
கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்சனை உடலில் தெரிந்தால், அது கல்லீரல் பழுதடைந் துள்ளதற்கான அறிகுறியாகும். வெளுத்த சருமம்
கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டு திட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்
அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்
உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.
மஞ்சள் நிற கண்கள்
கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்று நோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.
வாய் கசப்பு
கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுதுகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப் பட்டுள்ளது என்று அர்த்தம்.
வயிறு வீக்கம் கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.
Thanks for Your Comments