மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப் பெரிய உறுப்பு. உடல் ஆரோக்கியமாக இருப்ப தற்கு பல்வேறு முக்கியமான செயல் பாடுகளில் ஈடு படுவதும் இதுவே.
அதில் உடலில் சேரும் டாக்ஸின் களை வெளி யேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத் தக்கது.
எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றா லும், அதனால் உடலின் பல்வேறு செயல் பாடுகள் பாதிக்க ப்படும்.
அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றி னால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.
எனவே கல்லீரலில் பிரச்சனை இருந் தால் தென்படும் அறிகுறிகளை ஒவ்வொரு வரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
கால்களில் வீக்கம் ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல் படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் அவ்வப் போது ஏற்படும்.
எனவே திடீரென்று கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்து வரை சந்திக் கவும்.
மஞ்சள் காமாலை எப்போது ஒருவரின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக் கிறதோ,
அத்தகைய வருக்கு மஞ்சள் காமாலை காரண மாக பித்தநீர் தேங்கி யுள்ளது என்று அர்த்தம்.
வயிற்று உப்புசம் மற்றும் வலி
கல்லீர லில் கட்டி களானது அவ்வளவு சீக்கிரம் வராது. ஆனால் கல்லீர லானது தீவிர மாக பாதிக்கப் பட்டிருந் தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும்.
உங்கள் கல்லீரலில் கட்டிகள் இருந்தால், வலது பக்கத்தில் அடிவயிற் றிற்கு சற்று மேலே வலி எடுப்ப தோடு, வயிறு உப்பு சத்துட னும் இருக்கும்.
வாந்தி, சோர்வு, காய்ச்சல்
கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெப டைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி.
உங்களு க்கு கல்லீரல் அழற்சி இருந் தால், வாந்தி, சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்ற வற்றை சந்திக்கக் கூடும்.
தலைச் சுற்றல்
ஆல்கஹால் குடிப்ப வராக இருந் தால், விரைவில் கல்லீரல் பாதிக்கப் படும்.
ஆல்கஹால் அதிகம் பருகி கல்லீரல் பாதிக்கப் பட்டிருந் தால், தலைச் சுற்றல் மற்றும் குழப்பம் அடிக்கடி ஏற்படும்.
குமட்டல்
கல்லீரல் சரியாக இயங்காமல் இருப்பின், குமட்டலை சந்திக்கக் கூடும்.
எனவே உங்களுக்கு அவ்வப் போது குமட்டல் ஏற் பட்டால், உடனே மருத்து வரை சந்தி யுங்கள்.
அடர் நிற சிறுநீர்
கல்லீரலில் பிரச்ச னைகள் இருந்தால், உங்கள் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் வெளிவரும்.
எனவே இந்த நிலையை நீங்கள் சந்தித்தால், தவறாமல் மருத்து வரை சந்தி யுங்கள்.
சோர்வு
நாள்பட்ட சோர்வு கூட கல்லீரல் பிரச்சனைக் கான அறிகுறியே. ஆகவே உங்களு க்கு அடிக்கடி சோர்வு ஏற் பட்டால்,
மருத்து வரை சந்தித்து முறை யான பரிசோத னையை மேற் கொண்டு, சரியான காரண த்தைக் கண்டறி யுங்கள்.
Thanks for Your Comments