மாருதி சர்வீஸ் சென்டர் முறைகேடு அம்பலம் !

காரை கொடுக்கும் போது, கார் நீண்ட நேரம் கழித்து ஸ்டார்ட் செய்யும் போது, பெட்ரோல் வாடை அதிகம் வருவதாக ஒரு குறையை சொல்லி  சரி பார்த்து நிவர்த்தி செய்து தருமாறு கோரி காரை விட்டு ள்ளார். பின்னர், சர்வீஸ் முடிந்து காரை டெலிவிரி பெற்று விட்டார்.


காரை டெலிவிரி பெற்ற வுடன், காரில் இருந்த டேஷ்கேம் வீடியோ பதிவு களை ஆராய்ந் துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கிடைத்தி ருக்கிறது.
காரை சர்வீஸ் கொடுத்து விட்டு வந்தவுடன், வெறும் தண்ணீர் ஊற்றி கழுவி எந்த பிரச்னை குறித்தும்  ஆய்வு செய்யாமல் திரும்ப டெலிவிரி கொடுத்து ள்ளது தெரிய வந்து ள்ளது.

மேலும், கார் கழுவும் போது பணியாளர் ஒருவர் ஏசியை பயன் படுத்தி யதும், உணவு அருந் தியதும் தெரிய வந்து ள்ளது.  காரில் டேஷ்கேம் இருந்தது முதலில் அங்குள்ள பணியாளர் களுக்கு தெரிய வில்லை. 


ஆனால், டேஷ்கேம் இருந் தாலும், அதில் பதிவா கிறதா என்ற விஷயமும் அவர்க ளுக்கு புலப்பட வில்லை.

எனவே, அவர் களின் நடை முறைகள், நடிவடி க்கைகள் அனைத் தும், தற்போது வீடியோ ஆதார த்துடன் வெளியாகி உள்ளது. 

அந்த காரின் உரிமை யாளர் டீம் பிஎச்பி தளத்தின் உறுப்பினர் என்ப தால், அந்த வீடியோவை அப்படியே எடுத்து வெளியிட் டுள்ளார்.

இதை விட கொடுமை, அந்த காரை பொழுது போக்கும் இடம் போல இஷ்டத் திற்கு சில பணி யாளர்கள் அமர்ந்து இருப்பதும்,  அதன் பின்னர் சர்வீஸ் சூப்பர் வைசர் வந்து வெளியேற சொல்வதும் கூட பதிவாகி உள்ளது.

கார் கழுவி யவுடன், கார் பானட்டை திறந்து பணியாளர் ஒருவர் பார்க்கிறார். அத்துடன், காரில் இருந்த அனைத்தும் ஆய்வு செய்யப் பட்டதாக, அதற்கான படிவ த்தில் குறிப்பிட்டு, சர்வீஸை முடித்து விட்டனர்.


ஆயில் மற்றும் கூலண்ட் அளவு கூட அந்த சர்வீஸ் சென்டரில் ஆய்வு செய்யா தது தான் வாடிக்கை யாளருக்கு பெரும் ஏமாற்ற த்தை தந்துள்ளது. 

இது போன்ற சம்பவங் களும், முறை கேடுகளும் பெரும் பாலான சர்வீஸ் சென்டர் களில் சகஜமாக நடக் கிறது. 
ஆனால், அதற்கான ஆதாரம் இப்போது தான் வெளியாகி உள்ளது. 
தினசரி இது போன்று எத்தனை வாடிக்கை யாளர்கள் ஏமாற்றப் படுகின் றனர் என்பதை கணக் கிட்டால் நமக்கு தலை கிறுகிறுக் கிறது.
Tags:
Privacy and cookie settings