பெரில்லியம் உலோகத்தின் பயன்பாட்டை மேலும் விரிவாக்குவது குறித்து விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
‘பெரில்லியம்’ என்ற பெயரை கேள்விப் பட்டிருக் கிறீர்களா? இது ஒரு உலோக த்தின் பெயர். அதுவும் சாதாரண மான உலோகம் அல்ல இது.
மிக, மிக பலமான, அதே நேரத்தில் மிக, மிக எடைக் குறைவான ஒரு பொரு ளாகும். இது செல்போன்கள், ஏவுகணைகள், விமானங்கள் ஆகியவற்றின் பாகங்களாக பயன் படுத்தப் படுகிறது.
தண்ணீரின் கொதிநிலை 100 டிகிரி செல்சியஸ். அதாவது 100 டிகிரியில் தண்ணீர் கொதித்து, ஆவியாகத் தொடங்கி விடும்.
ஆனால், பெரில்லி யத்தை உருக்க, 1,287 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப் படும். காதிக்க வேண்டும் என்றால், 2,471 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தேவைப் படும்.
இரும்பை உருக்கி கொதிக்க வைக்க, 1,510 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருந் தால் போதும். இப்போது தெரிந்தி ருக்கும், இதன் உறுதி.
இவ்வளவு அற்புத மான இந்த உலோகம், கிரேக்க மொழில் பெரில் என்ற தனி மத்துக்கு வழங்கப் படும்
பெயரான பெரில்லியோஸ் என்ற பெயரில் இருந்து வந்துள்ளது. ஆனால், உண்மை யில் இதன் பெயர் குளுசினியம்.
இதுவும் கிரேக்க த்தில் இனிப்பு க்கு வழங்கப் படும் ‘கிளைகாஸ்’ என்ற பெயரில் அடிப்படை யில் இருந்து வந்துள்ளது.
இனிப் பான பெயரை பெரில்லியம் வைத்தி ருந்தாலும், மிகக் கொடிய விஷத் தன்மை வாய்ந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
இதை சாதாரண மாக ெதாட்டு கையாண்டு விட முடியாது. இதற்கென்று பிரத்யேக மான ஆடைகள், விதிகளை தெரிந்து கொண்டு தான் பயன் படுத்த முடியும்.
இதன் மூலம் நுரையீரல் புற்று நோய் ஏற்படும் என்றும் சர்வதேச புற்றுநோய் ஆய்வு மையம் கண்டறிந் துள்ளது.
1798ம் ஆண்டில் பிரான்ஸ் வேதிய லாளர் லூயிஸ் நிகோலஸ் வாகுலினால் ஆக்சைடு வடிவத்தில் கண்டு பிடிக்கப் பட்ட இந்த உலோகம்,
1828ல் ஜெர்மனியின் பிரெட்ரிச் வோலியர் மற்றும் பிரான்சின் ஆன்டோனி பஸ்சி என்ற விஞ்ஞானிகளால்
தனித் தனியாக பிரிக்கப்பட்டு பொட்டா சியத்துடன் கூடிய பெரில்லியம் குளோரைடாக கண்டறியப்பட்டது.
ஆரம்பக் காலத்தில் கடும் ஆபத்தான உலோகமாக இருந்த பெரில்லியம் உலோகம்
இப்போது பெருமளவில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படும் ஒரு உலோக மாக மாறி உள்ளது குறிப்பிடத் தக்கது.
தற்போது, எச்ஐவி.யை கண்டறிய உதவும் மருத்துவ உபகரணங்களில் இந்த உலோகம் பயன் படுத்தப் படுகிறது.
பெரில்லியத்தினால் நுரையீரல் புற்று நோய் ஏற்படுவதாக கூறப்பட்டாலும், இது அனைவருக்குமே ஏற்படுவதில்லை
என்பதை நேஷனல் ஜூவிஸ் ஹெல்த் அமைப்பின் ஆராய்ச்சியாளர் ஜான் கப்ளர் கண்டு பிடித்துள்ளார்.
மரபு வழியாக பெரில்லியத்தை ஏற்காதவர்களின் உடலில் தான் இவை நுரையீரல் புற்று நோயை ஏற்படுத்துகிறது என்பதையும்,
மற்றவர் களுக்கு எந்த பாதிப் பையும் ஏற்படுத்துவ தில்லை என்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் சான் பிரான்சிஸ்கோ மருத்துவ ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் கடுமையான பெரில்லிய பாதிப்பு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியுமா என்பது குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடந்து வரு கிறது.
Thanks for Your Comments