என் தந்தை அப்பாவி.. பேட்டிக் கொடுத்த ஹனிப்ரீத் கைது !

0
தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமின் வளர்ப்பு மகளும், ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலை மறைவாக இருந்த ஹனிப்ரீத் முதல் முறையாக தனது மௌனத்தைக் கலைத்தார்.
என் தந்தை அப்பாவி.. பேட்டிக் கொடுத்த ஹனிப்ரீத் கைது !
செய்தித் தொலைக் காட்சி ஒன்றில் பேட்டி அளித் திருந்த ஹனிப்ரீத், தனது தந்தை ஒரு அப்பாவி என்றும், அவர் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்றது என்னை மன உளைச் சலுக்கு ஆளாக்கி விட்டது என்றும் கூறி யிருந்தார்.

இந்த நிலையில் பேட்டி வெளியான சில மணி நேரங்களில், ஹனிப்ரீத் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு பெண்ணையும் ஹரியாணா காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் சிரக்புர் - பாட்டியாலா சாலையில் ஹனிப்ரீத்தை கைது செய்ததாக பஞ்குலா காவல் துறை ஆணையர் சாவ்லா தெரிவித்துள்ளார்.

குருமீத் ராம் ரஹீமுக்கு தண்டனை வழங்கப்பட்ட போது வன்முறை வெடித்த வழக்கில், பிரியங்கா தனேஜா என்கிற ஹனிப்ரீத், ஹரியாணா காவல் துறையி னரால் தேடப்பட்டு வரும் 43 முக்கியக் குற்ற வாளிகளில் முதல் நபராக சேர்க்கப் பட்டார்.

முன்னதாக ஆஜ் தக் என்ற ஹிந்தி தொலைக் காட்சியில் ஹனிப்ரீத் (36) கூறி யிருந்ததாவது, காவல் துறையினர் என் மீது சுமத்தியுள்ள குற்றச் சாட்டுகள் அனைத்தும் பொய் யானவை என்று தெரிவித் துள்ளார்.
மூடப்பட்ட காருக்குள் இருந்து பேட்டி அளித்திருந்த ஹனிப்ரீத், எங்கிருக்கிறார் என்பதை தொலைக் காட்சி தெரிவிக்க வில்லை. என்னை ஒரு வில்லன் போலவும், மோசமான வளாகவும் காவல் துறை சித்தரிக்கிறது. 

காவல் துறை என்னை எப்படி ஒரு குற்ற வாளியாக அறிவிக் கலாம்? நான் என்ன தப்பு செய்தேன்?  என் தந்தை யுடன் நான் இருந்தேன், ஒரு மகளாக என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே செய்தேன். 

என் தந்தையுடன் இருந்தது குற்றமா? நான் மக்களுக்கு எதிராக எந்தக் குற்றமும் செய்ய வில்லை என்றார். ரோஹ்தக்கில் இருந்து கிளம்பிய தாங்கள் எங்கு தங்கி யிருந்தீர்கள் என்ற கேள்விக்கு, நான் டெல்லிக்குச் சென்றேன். 
தற்போது நான் பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதி மன்றத்துக்கு செல்லப் போகிறேன். சட்டத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. எனது தந்தை ஒரு அப்பாவி என்றும் ஹனிப்ரீத் கூறியிருந்தது குறிப்பிடத் தக்கது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings