கேரள மாநில த்தில் உள்ள பைவ் ஸ்டார் நட்சத்திர ஹோட்டல் களில் பீர் தயாரித்து விற்பனை செய்ய அனுமதி கொடுக்க வேண்டும் என கலால் துறை ஆணையம் கேரள அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கேரள மாநில த்தில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது பைவ் ஸ்டார் ஹோட்டல் களில் உள்ள பார்கள் தவிர மற்ற அனைத்து மது பார்களும் மூடப் பட்டன.
கேரள அரசு மதுக் கடை களையும் படிப்படி யாக மூடவும் திட்ட மிட்டு இருந்தது. கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேரளா வில் ஆட்சியைப் பிடித்தது.
பினராயி விஜயன் தலைமை யிலான இடதுசாரி முன்னணி அரசு கேரளா வில் மீண்டும் மதுக்கடை களைத் திறக்க உத்தர விட்டது.
அதைத் தொடர்ந்து கேரள கலால் துறை ஆணையர், ரிஷிராஜ் சிங் கேரள மாநில அரசிடம் ஓர் அறிக்கைத் தாக்கல் செய் துள்ளார்.
அந்த அறிக்கை யில் கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் பல நட்சத்திர ஹோட்டல் களில் அவர்களே பீர் தயாரித்து வருகி றார்கள்.
அதுபோல கேரளாவில் பாரோடு இயங்கும் பைவ் ஸ்டார் ஹோட்டல் களில்
அவர்களே சொந்தமாக பீர் தயாரித்து விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் எனத் தெரிவித் துள்ளார்.
இந்தக் கோரிக்கை கேரள அரசின் பரிசீலனை யில் உள்ளது.
கேரள மாநில அரசு அனுமதி கொடுத் தால் பைவ் ஸ்டார் ஹோட்டல் களில் பீர் தயாரிப்புப் பணி உடனடி யாகத் தொடங்கி விடும்.
பீர் தயாரிக்கும் பொருள்கள் மற்றும் மெஷின்கள் அமைப் பதற்கு சுமார் ஒன்றரை கோடி வரை செலவாகும்.
இதற்கு கேரள காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்புத் தெரிவித் துள்ளது.
Thanks for Your Comments