தாஜ்மஹாலை இடிக்கும் முன்பு சொன்னால் கடைசியாக குழந்தைகளுக்கு காட்டி விடுவோம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச அரசு தனது சுற்றுலாத் தலங்களுக்கான பட்டியலில் இருந்து தாஜ்மகாலை அண்மையில் நீக்கியது.
தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்பட வில்லை என உத்தரப் பிரதேச அரசு விளக்கம் அளித்தது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இஸ்லாமிய மன்னரால் கட்டப்பட்டது என்ப தாலேயே தாஜ்மஹால் நீக்கப் பட்டதாக எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டின.
பிரகாஷ் ராஜ்
இந்து கோயிலை இடித்து விட்டு ஷாஜகான் தாஜ்மஹாலை கட்டிய தாக உத்தரப் பிரதேச அமைச்சர் ஒருவர் கூறினார்.
இந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். கடைசியாக காட்டி விடுகிறோம் அதில் தாஜ்மஹாலின் அடித்தளத்தை தோண்ட ஆரம்பித்து விட்டீர்கள்,
எப்போது இடிக்கிறீர்களோ முன்னதாக சொல்லி விடுங்கள் குழந்தைகளுக்கு கடைசியாக தாஜ்மஹாலை காண்பித்து விடுகிறோம்.. என தெரிவித்துள்ளார்.
#justasking .....Will this worlds wonder #tajmahal be a past in our future ..??? pic.twitter.com/4tTvBHr7UR— Prakash Raj (@prakashraaj) October 23, 2017
விமர்சனம்
தாஜ்மஹால் குறித்த நடிகர் பிரகாஷ் ராஜின் ட்விட்டர் பதிவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்து வருகிறது.
கர்நாடக பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனமாக இருப்பதாக பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்திருந்தார்.
டிவிட்
பாஜகவை சீண்டும் டிவிட் பிரதமர் மோடி தன்னைவிட சிறந்த நடிகர் என்றும் அவர் சாடியிருந்தார். இது தொடர்பாக பிரகாஷ் ராஜ் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் பாஜகவை சீண்டும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் டிவிட்டியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments