தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்னும் மூன்று தினங்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித் துள்ளார்.
சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக மழை பெய்து வருகிறது. சென்னை யில், பல்வேறு பகுதி களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், இன்று சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இந்த நிலையில், செய்தி யாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், இலங்கைக்கு அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, தற்போது மன்னார் பகுதிக்கு நகர்ந் துள்ளது.
அதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில தினங் களுக்கு மழை நீடிக்கும். தென் கடலோர மாவட்டங்களில்,
ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். தமிழகத்தில், அதிக பட்சமாக சீர்காழியில் 31 செ.மீ மழை பதிவாகி யுள்ளது.
நுங்கம் பாக்கத்தில் 12 செ.மீ மழையும், செம்பரம் பாக்கத்தில் 18 செ.மீ மழையும், மீனம் பாக்கம் பகுதியில் 16 செ.மீட்டர் மழையும் பதிவாகி யுள்ளது'' என்று தெரி வித்தார்.
Thanks for Your Comments