திருநெல்வேலி மாவட்டத்தில் 4 பேர் தீக்குளிப்பு சம்பவத்திற்கு கடைய நல்லூர் காவலர்களின் அலட்சியம் தான் காரணம் என பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் கணவன் இசக்கி முத்து, மனைவி சுப்புலட்சுமி, 2 குழந்தைகள் உள்பட 4 பேர் திடீரென தீக்குளித்தனர்.
கந்து வட்டி கொடுமை காரணமாக தீ குளிப்பு சம்பவம் நடந்த தாக கூறப்படுகிறது. ஆனால், கடையநல்லூர் காவல் நிலையத்தில் சப்–இன்ஸ் பெக்டராக பணிபுரியும் முருகன், ஏட்டு தங்கத்துரை ஆகியோர்
கந்து வட்டி வழங்கும் நபர்களுக்கு ஆதரவாக இருந்துள்ள தாக கூறப் படுகிறது.
அதனுடன், கணவன், மனைவி எதிர் தரப்பை சேர்ந்தவர்களிடம் பணத்தை வாங்கி கொண்டு போலீசார் கட்டப் பஞ்சாயத்து செய்ததாக தெரிகிறது.
இதில், இசக்கி முத்து மற்றும் அவரது குடும்பத்தை அவமரியாதையாக பேசி மிரட்டியதாகவும், பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு தொந்தரவு செய்த தாகவும் அப்பகுதி மக்கள் பேசி வருகின்றனர்.
இதனால், கணவன், மனைவி, 2 குழந்தைகள் தீ குளிப்பு சம்பவத்திற்கு கடைய நல்லூர் காவலர்கள் காரணம் என குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், எஸ்.பி. அருண்சக்தி குமார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட சப் இன்ஸ் பெக்டர், ஏட்டு உள்பட
இதில் தொடர்புடைய போலீசார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப் படுவார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
Thanks for Your Comments