பரோலில் வெளியே வந்த சசிகலா !

0
உடல் நலமில்லாமல் சென்னை மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப் பட்டுள்ள தமது கணவர் நடராஜனைப் பார்க்க வேண்டும் என்று 15 நாள் பரோல் கேட்டி ருந்தார் சசிகலா.
பரோலில் வெளியே வந்த சசிகலா !
சென்னை மருத்துவ மனை ஒன்றில் உள்ள நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது.

முதல் முறை தாக்கல் செய்த மனுவில் அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் ஒருவரின் சான்றொப் பத்துடன் கூடிய நடராஜனின் மருத்துவ சான்றிதழ் இல்லை என்று கூறி பரோல் மனுவை நிராகரித்த அதிகா ரிகள், 

சசிகலா வழக்குரை ஞர்களிடம் உரிய தகவல் களுடன் புதிதாக விண்ணப் பிக்கும்படி அறிவுரை கூறினர். இதை யடுத்து புதிய பரோல் மனு புதன்கிழமை தாக்கல் செய்யப் பட்டது. 

வெள்ளிக் கிழமை அவருக்கு சிறை அதிகாரிகள் ஐந்து நாள் பரோல் (விடுப்பு) அனுமதித்தனர். 

சென்னையில் அவர் பாதுகாப்புக்கு பொறுப் பேற்றுள்ள சென்னை போலீசார், அவர் சென்னையில் தங்கி யிருக்கும் போது அரசியல் கூட்டம் எதிலும் பங்கேற்கக் கூடாது என்று நிபந்தனை விதித் துள்ளனர். 

இந்நிலை யில் வெள்ளிக் கிழமை காலை முதலே சிறைக்கு வெளியே காத்திருந்த டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அவரது ஆதரவு அதிமுக வினர் அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.
ஜெயலலிதா இறந்த பிறகு முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வத்தை நீக்கி விட்டு சசிகலாவை முதல் வராகத் தேர்ந் தெடுத்து 

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் இயற்றிய நிலையில், அவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறை யீட்டில் உச்ச நீதிமன்றம் தீர்ப் பளித்தது.

சசிகலா வுக்கு அத் தீர்ப்பில் நான்கு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டவுடன் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த பிப்ரவரி யில் அடைக்கப் பட்டார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings