காஞ்சிபுரம் எஸ்.பி, தனது குடும்ப அலுவல் காரணமாக 10 நாள் விடுமுறையில் சென்றிருக்கிறார்.
இதை தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்தி, மணல் அள்ளுவது உள்ளிட்ட பல வேலைகளை முடித்துக் கொள்ள காவல் துறையினர் திட்ட மிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் எஸ்.பி-யாக சந்தோஷ் ஹதிமானி பொறுப் பேற்று 6 மாதங்கள் ஆகின்றன. அவர், தனது அதிரடி நடவடிக்கைகளை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்.
ஸ்ரீதர் தொடர்பான வழக்குகள் மற்றும் நடவடிக்கைகளில் அவருக்கு காஞ்சிபுரம் பகுதியில் நல்ல பெயர் கிடைத்தது.
ரௌடிகளைக் கட்டுப்படுத்துவது, காவலர்களுக்கு உதவுவது, மணல் கொள் ளையைத் தடுப்பது என அதிரடிகளுக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், எதையும் அலட்டிக் கொள்ள மாட்டார்.
காஞ்சிபுரம் சார் ஆட்சியராகப் பணிபுரிந்த அருண் தம்புராஜ், மணல் கொள்ளையில் அதிரடி காட்டினார். சில மாதங்களுக்கு முன் அவர், பதவி உயர்வு பெற்று திருச்சிக்குச் சென்றார்.
சந்தோஷ் ஹதிமானி, மணல் அதைத் தொடர்ந்து, மணல் விவகார ங்களில் கடுமை காட்டினார் எஸ்.பி. இதனால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என மணல் கொள்ளையில் ஈடுபட்ட மணல் மாஃபியாக் களுக்கு கடிவாளம் போடப் பட்டது.
லாரிகள் வைத்துள்ள ஆளும் கட்சிப் புள்ளிகள், மணல் எடுக்க முடியாமல் தடுமாறினர். இந்த நிலையில், அவருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதால், குழந்தை மற்றும் குடும்பத் தினரைப் பார்க்க விடுப்பில் சென்றுள்ளார்.
இதை, தங்க ளுக்கு சாதக மாகப் பயன் படுத்திக் கொள்ள காவல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள், உள்ளூர் காவல் நிலையத் திற்கு போன் செய்து, 'எஸ்.பி, 10 நாள் விடுப்பில் வெளியூர் போய் இருக்கிறார்.
அவர் வரும் வரை எவ்வளவு மணல் எடுக்க முடியுமோ எடுத்துக்குங்க. ஒரு லோடுக்கு இவ்வளவு கமிஷன் கொடுத் துடணும்' என வாய் மொழியாக உத்தரவு கொடுத்து ள்ளதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.
எஸ்.பி., சந்தோஷ் ஹதிமானி விடுமுறையில் இருப்ப தால், இதைப் பயன் படுத்தி தங்களுக்குத் தேவையான வற்றை சாதித்துக் கொள்ள காஞ்சிபுரம் காவல் துறையினர் திட்ட மிட்டிருப்ப தாக, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர்.
Thanks for Your Comments