அமெரிக்கா வின் டெக்சாஸ் மாகாண த்தில் உள்ள லப்பாக் நகரில் டெக்சாஸ் தொழில் நுட்ப பல் கலைக் கழகம் உள்ளது.
மாகாணத்தின் மிக முக்கிய பல்கலைக் கழகம் என்பதால் பல்கலைக் கழகத்தின் வளாகத்துக் குள்ளேயே போலீஸ் நிலையமும் அமைந்து உள்ளது.
இந்த நிலையில், பல்கலைக் கழக விடுதியில் தங்கி உள்ள ஒரு மாண வருக்கு உடல் நலம் குன்றி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், போலீசார் அந்த மாணவரை பார்க்க அவரது அறைக்கு சென்றனர்.
அப்போது அவரது அறையில் போதை மருந்து மற்றும் அதனை பயன் படுத்துவதற்கான கருவிகள் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந் தனர்.
இதை யடுத்து, விசார ணைக்காக அந்த மாணவரை போலீசார் பல்கலைக் கழக வாளக த்தில் உள்ள போலீஸ் நிலைய த்துக்கு அழைத்து சென்றனர்.
அங்கு போலீஸ் அதிகாரி ஒருவர் மாண வரிடம் விசாரித்துக் கொண்டி ருந்தார். அப்போது திடீரென அந்த மாணவர் தான் மறைத்து வைத் திருந்த துப்பா க்கியை எடுத்து, போலீஸ் அதிகாரியை நோக்கி சுட்டார்.
இதில், அவரது தலையில் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ள த்தில் சரிந்து சம்பவ இடத்தி லேயே உயிர் இழந்தார்.
இதை யடுத்து அந்த மாணவர் போலீஸ் நிலைய த்தில் இருந்து தப்பி ஓடி, அங்கு உள்ள விளையாட்டு மைதான த்துக்குள் பதுங்கி கொண்டார்.நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின் போலீசார் அவரை கைது செய்தனர்.
அவரது பெயர் ஹோல்லிஸ் டேனியல்ஸ் என்பதும், அவர் முதலாம் ஆண்டு மாணவர் என்பதும் தெரிய வந்து உள்ளது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.
Thanks for Your Comments