தாஜ்மஹால் சுற்றுலா பட்டியலில் நீக்கம்... எஸ்.டி.பி.ஐ கண்டனம் !

0
உலகப் புகழ் பெற்ற அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் உத்திர பிரதேச சுற்றுலாத்தல பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. 
தாஜ்மஹால் சுற்றுலா பட்டியலில் நீக்கம்... எஸ்.டி.பி.ஐ கண்டனம் !
இது குறித்து  எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களுக்கான புதிய பட்டியலை வெளி யிட்டுள்ள அம்மாநில அரசு அதில் உலகப் புகழ் வாய்ந்த அதிசய ங்களில் ஒன்றான  தாஜ்மஹாலை நீக்கி உத்தரவு பிறப்பித் துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. 

புகழ் பெற்ற சுற்றுலாத் தலங் களில் ஒன்றான தாஜ்மஹா லுக்கு ஆண்டு தோறும் 20 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கி ன்றனர். 

தாஜ்மஹால் இந்திய கலாச் சாரத்தை பின்பற்றி கட்டப் படாததால் பட்டிய லில் சேர்க்கப் பட வில்லை எனவும், 

அரசின் சுற்றுலாத் தலங்கள் பட்டிய லில் தாஜ்மஹால் நீக்கப் பட்டுகிறது எனவும் உத்தரப் பிரதேச பாஜக அரசு விளக்கம் அளித் துள்ளது.
தாஜ்மஹாலை சுற்றுலா த்தல பட்டியலில் இருந்து உத்திர பிரதேச அரசு நீக்கியு ள்ளது  யோகி ஆதித்யநாத் தலைமை யிலான பாஜக அரசு சிறு பான்மை சமூக மக்களின் அடை யாளங்களை 

அழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத் தோடு செயல் படுகிறது என்பதையே காட்டு கின்றது. 

அதே நேரத்தில் உத்திரப் பிரதேச அரசின் புதிய சுற்றுலா மையங் களின் பட்டி யலை முதல்வர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டு 

அதில் காசி நகரத்திற்கு முதலி டமும், கிருஷ் ணரின் பிறப்பிட மான மதுராவு க்கு இரண்டாவது இடமும் அளிக்கப் பட்டுள்ளது. 

உத்திரப் பிரதேச முதல்வர் ஆதித்ய நாத்தின் கோரக்பூர் மடத் திற்கு நான்காவது இடம் அளிக்கப் பட்டுள்ளது. 

தாஜ்மஹால் என்பது புனித தலம் அல்ல. மாறாக, முகலாய மன்னர் களின் கட்டிட கலை யினை பறை சாற்றக் கூடிய தாகவும், இந்திய கட்டிட கலைக்கு பெருமை சேர்க்க கூடிய தாகவும் இருந்து வருகி ன்றது. 
ஆனால் தாஜ்மஹால் இஸ்லாமிய மன்னரான ஷாஜஹானால் கட்டப் பட்டது என்ற ஒரே காரணத் திற்காக உலக அதிசயங் களின் பட்டிய லில் இடம் பிடித்து இந்திய கட்டிட கலைக்கு பெருமை சேர்த்து வந்த 

இதை முக்கிய சுற்றுலா தலங் களின் பட்டியலில் இருந்து உத்திரப் பிரதேச அரசு நீக்கி யுள்ளதை எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் வன்மை யாக கண்டிக் கிறேன்.

ஐ.நா. சபையின் 'கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார' நிறுவனம் யுனெஸ்கோ. என்ற அமைப்பு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பாரம்பர்ய சுற்றுலா இடங் களைத் தேர்வு செய்து பட்டியல் வெளியிடும். 

அதில் எப்போதுமே இடம் பெறும் பெயர், 'தாஜ்மஹால். இப்படி உலகப் புகழ் பெற்ற வரலாற்றுச் சின்னமான தாஜ்மஹாலை சுற்று லாத்தலங் களின் பட்டியலி லிருந்து நீக்கி யுள்ளது உத்தரப் பிரதேச அரசு. 
கடந்த இரண்டு நாள்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்தியாவின் கலாசாரங் களைப் பிரதிபலிப்பது என்றால் அது ராமாயணமும் பகவத் கீதையும் தான். தாஜ்மஹால் அல்ல” என்றார்.

இதன் மூலமாக பாரதிய ஜனதா கட்சி தனது மதவாத போக்கை தொடர்ந்து வெளிக் காட்டி வருவது தெளிவா கிறது. 

இவ்விசய த்தில் மத்திய அரசு தலையிட்டு உத்திர பிரதேச சுற்றுலாத் தலங்களில் உலக புகழ் பெற்ற தாஜ்மஹாலை சேர்க்க வழிவகை செய்ய வேண்டும் என வலியுறுத் துகிறேன்.

தொடர்ந்து வரும் பா.ஜ.க வின் வெறுப்பு அரசியல் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். 
மக்கள் இத்தகையை வெறுப்பு செயலுக்கு கடும் கண்டன ங்களை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள் கிறேன். இவ்வாறு அவர் அந்த அறிக்கை யில் தெரிவித் துள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings