தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்த தமிழிசை !

0
தி.மு.க செயல் தலைவர் மு.க. ஸ்டாலினைப் பற்றி கிண்டலுடன் பதில் அளித்துள்ளார், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன். 
ஸ்டாலினை கிண்டல் செய்த தமிழிசை !
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், மானியத்தில் இருந்து சர்க்கரையை விலக்குவதாக அப்போதே தமிழக அரசு தீர்மானம் போட்டு விட்டது. 

தற்போதைய மத்திய அரசு, தொடர்ந்து ஏழைகளுக்குக் கொடுக்க வேண்டிய மானியத்தை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறது. 13.50 ரூபாய்க்கு இன்று சர்க்கரை கொடுக்கப் படுகிறது. 

வெளி மார்க்கெட்டில் சர்க்கரை விலை 45 ரூபாய். தற்போது 25 ரூபாய்க்கு கொடுப்பதில் கூட மத்திய அரசின் பங்களிப்பு 20 ரூபாய் இருக்கிறது. 

இதனால், மத்திய அரசை பொறுத்த மட்டில் தமிழக மக்களுக்கு நல்லதைத் தான் செய்து கொண்டிருக்கிறது. 

ஆனால், ஏழைகளுக்கு 13.50 ரூபாயில் தான் கிடைக்கிறது என்பது முற்றிலுமாக இருட்டடிப்பு செய்யப்பட்டு, மானியம் தேவை யில்லாதவர் களுக்கு ஏற்றப் பட்டதை எல்லோருக்கும் ஏற்றப் பட்டதைப் போல 

ஒரு மாயத் தோற்றத்தை எதிர்க் கட்சிகள் ஏற்படுத்திக் கொண்டிருக் கின்றன. ஜி.எஸ்.டியாக இருந்தாலும் சரி, சர்க்கரை விலையாக இருந்தாலும் சரி, இதைத் தான் செய்கிறார்கள். 
மாணவர்கள் முன் பேசிய ஸ்டாலின், இந்த ஆட்சி கலையும் என்கிறார். உங்கள் அரசியல் திணிப்பை மாணவர் களிடம் கொண்டு சேர்க்க வேண்டாம். 67-ல் தான் அப்படிச் செய்தீர்கள். 

இன்று ஆரோக்கியமான அரசியலை பா.ஜ.க நடத்திச் செல்கிறது. அதனால் தான், வன்முறை அரசியலுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று சொல்கிறோம். 

வரும் 3-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஓர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்தி ருக்கிறது. பா.ஜ.க அராஜகத்தில் ஈடுபடுகிறது என்று கூறிக்கொண்டு, என் வீட்டு முன்னால் கொடும் பாவிகளை எரிக்க வந்தவர்கள் அவர்கள். 

கரூரில் எங்களது செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற வர்களை அவர்கள் தாக்க வந்தார்கள். மயிலாடுதுறைக்கு நாங்கள் சென்ற போது, கறுப்புக் கொடி காட்டி என்னைத் தாக்க வந்தார்கள். 
அனைத்தையும் அவர்கள் செய்து விட்டு, பா.ஜ.க அராஜகத்தில் ஈடுபடுகிறது என்று சொன்னால் எப்படி? நாங்கள் நேர்மறை அரசியல் திட்டத்தைச் செயல் படுத்துகிறோம். மக்களுக்கு நல்லது செய்வோம் என்றார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings