மெர்சல் படகாட்சிகள் நீக்க... பெருகும் எதிர்ப்பு !

0
விஜய் நடித்து அண்மையில் வெளியான மெர்சல் திரைப்படத்தில் இருந்து பாஜக அரசை விமர்சிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் என்று 
மெர்சல் படகாட்சிகள் நீக்க... பெருகும் எதிர்ப்பு !
அக்கட்சி யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் கூறியிருப் பதற்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகி ன்றனர்.

இந்த சர்ச்சை தேசிய ஊட கங்களின் பேசு பொருளாகவும், சமூக ஊடகங் களில் டிரெண்டா கவும் மாறியி ருக்கிறது. 

சமூக ஊடக ங்களில் வெளியாகும் கிண்டல் களுக்கும், மீம்க ளுக்கும் குறை வில்லை. சமூக வலைத் தளமான டிவிட்டரில் #ModiVsMersal என்ற ஹேஷ்டேக் டிரென்டாகத் தொடங்கி யுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டரில் வெளி யிட்ட கருத்து:

திரு. மோடி, தமிழ்ப் பண்பாடு மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு சினிமா. மெர்சலில் தலை யிடுவதன் வாயிலாக தமிழ்ப் பெரு மிதத்தை மதிப்பு நீக்கம் செய்ய வேண்டாம்.
மெர்சல் திரைப் படத்தின் காட்சி களை நீக்கக் கோருகிறது பாஜக. பராசக்தி படம் இன்று வெளியாகி யிருந்தால் பின் விளைவுகள் என்ன வாக இருந்திரு ந்திருக்கும் என்று டிவிட்டரில் கேட் டுள்ளார் ப.சிதம்பரம்.

திமுக தலைவர் கருணாநிதி யின் திரைக் கதை வசனத்தில் 1952ல் வெளியான பராசக்தி திரைப்படம் சமூக தீங்குகளை, 

அரசை, மூட நம்பிக்கை களை எதிர்த்த படம். சிவாஜி கணேசன் அப்பட த்தின் மூலமே தமிழ்த் திரையுல கத்துக்கு நடிகராக அறிமுக மானார்.

வேறொரு டிவிட்டர் பதிவில் "படம் எடுப்பவர் களுக்கு அறிவிப்பு. சட்டம் வருகிறது, அரசின் கொள்கை களை புகழ்ந்து ஆவணப் படம் மட்டுமே நீங்கள் எடுக்க லாம்," என்று கிண்ட லாகத் தெரிவித் துள்ளார் ப.சிதம்பரம்.

இதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா டிவிட்ட ரிலேயே இப்படி பதில் சொல்லி யிருக்கிறார்.
ஹெச். ராஜா முன்ன தாக வெளி யிட்ட வேறொரு டிவிட்டர் பதிவில் நடிகர் விஜய் கிறிஸ்துவர் என்பறும், அதனால் அவர் மோடியை எதிர்க் கிறார் என்றும் குறிப்பிட் டுள்ளார். 

சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது தவறு என்றும் அவர் குறிப்பிட் டுள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் ஆங்கி லத்தில் கருத்துத் தெரிவித்த கமலஹாசன் மெர்சல் சான்றிதழ் பெற்றது. அதனை மறு தணிக்கை செய்ய வேண்டாம். 

விமர்சனத்தை தர்க்க பூர்வமான வாதங்களின் மூலம் எதிர் கொள்ள வேண்டும். விமர்சகர்களின் வாயை அடைக்க வேண்டாம். பேசும் போது தான் இந்தியா ஒளிரும், என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை யில் பேசிய திரைப்பட இயக்குநர் பா. ரஞ்சித்தும் காட்சி களை நீக்கத் தேவை யில்லை என்று கருத்துத் தெரிவித் திருந்தார். சமூக வலைத் தளத்திலும் பாஜகவுக்கு கடும் எதிர் வினைகள் வரு கின்றன. 
மெர்சலுக்கு மறு தணிக்கை வேண்டும் என்றால், எங்களுக்கு மறு தேர்தல் வேண்டும் என்று ஒரு மீம் வெளி யானது.

ஏ.ஆர். ரகுமானின் பின்னணி இசையை விட பாஜகவின் பின்னணி இசையே மெர்சலை பெரிய படமாக் குகிறது என்று ஒரு பதிவர் கருத்துப் பதிந்தார்.

ஃபேஸ்புக்கிலும் மெர்சலை விமர் சிக்கும், காட்சி களை வெட்டக் கோரும் பாஜகவு க்கு, கிண்ட லாக எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன. 

பாஜக வுக்கு எதிராக விஜய் பேசும் காட்சிகள் ஏற்கெனவே சமூக வலைத் தளத்தில் பகிரப்பட்டு வலம்வரத் தொடங்கி விட்டன. 
சினிமாவை தணிக்கை செய்தாலும் இந்தக் காட்சி களை பகிர்ந்து வைரலாக்குவோம் என்று பலர் சமூக ஊடகங்களில் தோள் தட்டுகிறார்கள். 

தமிழிசையும், ஹெச். ராஜாவும் பேசி மோடியை வம்பில் இழுத்து விட்ட தாக கிண்ட லாகக் கூறும் மீம் ஒன்று.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings