ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்காவும், அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் வெளியேறி யுள்ளன.
இஸ்ரேலுக்கு எதிராக யுனெஸ்கோ பாகுபாடு காட்டுவதாகக் கூறி அமெரிக்கா தமது முடிவை அறிவித்தது. அதையடுத்து இஸ்ரேலும் விலகுவதாக அறிவித்தது.
அமெரிக்காவின் இந்த முடிவை துணிச்சலான, அறம் சார்ந்த முடிவு என்று வருணித்தார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நீதன்யாகு.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, யுனெஸ்கோ பாலஸ் தீனத்தை உறுப்பினராக சேர்த்துக் கொண்டதை அடுத்து அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு வழங்கி வந்த நிதியைக் குறைத்தது.
எனினும் அமெரிக்கா செலுத்த வேண்டிய பங்களிப்பு நிலுவை கூடிக்கொண்டே வந்ததும் தங்களுக்கு சுமையாக இருந்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
Thanks for Your Comments