ஏப்ரல் 25, இன்று உலக மலேரியா தினம். உலகம் முழுவதும் 106 நாடு களில் வாழும் 330 கோடி மக்க ளுக்கு மலேரியா தாக்கம் ஏற்படும் அபாயத் துடன் தான் வாழ்ந்து வருகி றார்கள்.
பெரும் பாலும் ஆப்ரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் மலேரியா தாக்கம் அதிக மாக ஏற்பட் டுள்ளது.
இதில் வருத்த த்திற்குரிய தகவல் என்ன வெனில், மலேரியா தாக்கத் தால் உயிரி ழப்பவர் களில் பெரும் பாலானோர் குழந்தைகள்.
ஏறத்தாழ உலக மக்கள் தொகையில் 40% மக்களை அச்சுறுத்தும் நோயாக இருந்து வரும்
மலேரியா குறித்த விழிப்புணர்வு உண்டாக வேண்டும் என்பதற் காக தான் இந்த உலக மலேரியா தினம் அனு சரிக்கப் படுகிறது.
1 . சில புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வரும் தகவல் என்ன வெனில், மலேரியா வில் தாக்கத் தால் மட்டுமே
ஏறத்தாழ வருடத் திற்கு 5 லட்சம் பேர் இறக்கி றார்கள். இதில் பெரும் பாலான வர்கள் குழந்தைகள் என்பது வருத்தத் திற்குரியது.
2 . மலேரியா தாக்கம் உண்டாகியிருக்கிறது என்பதை வெளிப் படுத்தும் முதல் அறிகுறி காய்ச்சல்.
மேலும், தலைவலி, உடல் அதிகமாக சில்லென இருப்பது போன்ற வையும் கூட மலேரியா விற்கான அறிகுறிகள் தான்.
3 . பெரும்பாலும் மலேரியா திடீர் காலநிலை மாற்ற த்தின் போது தான் அதிகமாக பரவு கிறது.
4 . சில சமயங் களில் மலேரியா தாக்கம் உண்டானே ஓரிரு நாட்களில் இறந்த வர்களும் உண்டு.
எனவே, கால நிலை மாற்றங்கள் மற்றும் ஊரில் மலேரியா தாக்கம் அதிகரிக்கும் போது உடனே பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
5 . கர்ப்பிணி பெண்க ளுக்கு மலேரியா தாக்கம் உண்டாவது, கருவில் வளரும் சிசுவையும் தாக்க வாய்ப்புகள் உண்டு. இந்த தாகத்தால் குழந்தை குறைந்த உடல் எடையுடன் பிறக்க லாம்.
6 . மலேரியா தொற்று நோய் அல்ல. பாதித்த நபரை தொட்டு பேசுவ தால் மலேரியா பரவுவதில்லை.
7 . கொசு வலை, வீட்டில் தண்ணீர் தேங்காமல் பாது காப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் மலேரியா பரவாமல் பாதுகாக்க முடியும்.
Thanks for Your Comments