விஷாலின் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை என்று ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவு விளக்க மளித்துள்ளது.
விஷால் பிலிம் பேக்டரி என்ற பெயரில் சொந்த மாகத் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார் விஷால். இவரது தயாரிப்பில் அண்மை யில் மிஷ்கின் இயக்க த்தில் 'துப்பறிவாளன்' திரைப் படம் வெளி யானது.
இதற்கிடை யில் இன்று வடபழனி யில் உள்ள அவரது அலுவல கத்தில் ஜி.எஸ்.டி நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் சோதனை செய்ததாக செய்திகள் வெளி வந்தது.
திரைப்பட கணக்கு வழக்குகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவ தாகத் தகவல் வெளி யானது.
சில நாள் களுக்கு முன்பு நடிகர் விஷால், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவைக் கடுமை யாக விமர்சித்து அறிக்கை விட்டி ருந்தார்.
அதில், ''நான் திருட்டுத் தனமாக இணைய த்தில் புதிய படத்தைச் சட்ட விரோத மாகப் பார்த்தேன்’ என்று ஒப்புக் கொண்டி ருப்பது மிகவும் வேதனை யளிக்கிறது.
மக்கள் அறிந்த ஒரு தலை வராக இருந்து கொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக் கிறீர்கள்?
உங்களது செயலுக்குப் பகிரங்க மாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமை யான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி யிருந்தார்.
இந்தநிலை யில் விஷால் அலுவல கத்தில் வருமான வரித்துறை யினர் சோதனை நடத்திய தாக செய்திகள் வெளி வந்தது. ஆனால், இதனை ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவு மறுத் துள்ளது.
இது தொடர்பாக அவர்கள் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில், தயாரிப் பாளர் விஷால் அலுவல கத்தில் ஜி.எஸ்.டி நுண்ண றிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்துவ தாக செய்திகள் வெளி வந்தன.
அந்தச் செய்தி தவறானது. விஷால் அலுவலக த்தில் சோதனை கள் எதுவும் மேற் கொள்ளப் படவில்லை' என்று விளக்க மளித்து ள்ளனர்.
Thanks for Your Comments