தன்னை வைத்து காமெடி செய்வதாக கூறி மீடியாக் களுக்கு பேட்டி யளிக்க மறுத்து அமைச்சர் செல்லூர் ராஜூ ஓட்டம் பிடித்தார்.
அமைச்சர் செல்லூர் ராஜூ வைகை அணையில் இருந்து நீர் ஆவியா வதை தடுக்க தெர்மா கோலைக் கொண்டு மூடினார். ஆனால் அடுத்த சில நிமிடங் களிலேயே தெர்மா கோல்கள் கரை ஒதுங்கின.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப் பட்டது. அவ்வளவு பெரிய அணையை சிறிய தெர்மாகோல் கொண்டு மூடிய அமைச்சரை சமூக வலை தளங்கள் மட்டுமின்றி எதிர்க் கட்சியினரும் சரமாரியாக கலாய் த்தனர்.
அன்று முதல் பெரும் பிரபலமாகி விட்டார் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவர் எதை செய்தாலும் அது காமெடி யாகத் தான் இருக்கும் என்ற நிலை மைக்கு வந்து விட்டார்.
சசிகலா பரோலில் வந்த போது, இந்த ஆட்சி அமைய சசிகலா தான் காரணம் என்று கூறி ஓபிஎஸ் க்கும் ஈபிஎஸ் க்கும் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பின்னர் மன சாட்சிப்படி தான் கூறினேன் என விளக்கம் அளித்தார்.
தொடர்ந்து வீட்டு வாசலில் சாணம் தெளித்தால் டெங்கு வராது என்றும் அவர் கூறினார். மேலும் மழை அதிக மாக பெய்வ தால் தான் டெங்கு அதிகமாக பரவுவ தாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் சமூக வலை தளங்களில் பெரிதும் கலாய்க்கப் பட்டார். அவர் குறித்த மீம்ஸ்கள் அதிக ளவில் வெளியாகி வரு கின்றன. இந்நிலையில் மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.
அப்போது மீடியாக் காரர்கள் மைக்குடன் அவரிடம் செல்ல, என்னை வைத்து லந்து செய்கி றீர்கள் என்ற கல கலப்பாக கூறிவிட்டு ஓட்டம் பிடித்தார் அமைச்சர் செல்லூர்.
Thanks for Your Comments