முதல்வரு க்கு எதிராக போர்க்கொடி துாக்கிய, சசியால் ஏவி விடப்பட்ட தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ., க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால், நேற்று அதிரடி உத்தர விட்டார்.
அனைவரையும் இணைத்து ஆட்சியைப் பிடிக்கலாம் என, பகல் கனவு கண்டு கொண்டிருந்த, தினகரனின் திட்டம், தவிடு பொடியானது.
அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா மறைவுக்குப் பின், முதல்வர் பதவியில் அமர, ஆளாளுக்கு முயற்சி செய்தனர்.
தோழி சசிகலா; அவரை அடுத்து, அவர் குடும்பத்தைச் சேர்ந்த, கணவர் நடராஜன்; பின், தம்பி திவாகரன்; தற்போது, அக்கா மகன் தினகரன் என, 'மியூசிக்கல் சேர்' விளையாட்டு நடந்து வந்தது.
சசிகலா சிறை செல்வதற்கு முன், முதல்வராக பன்னீர் செல்வம் நியமிக்கப் பட்டார்; அவரைத் துாக்கி எறிந்தார் சசிகலா. பின், தனக்கென, ஆதரவுக் கூட்ட த்தைப் பெருக்கினார்.
தனபாலுக்கு பரிந்துரை
ஆனால், முதல்வர் பதவியில் அமர்வத ற்குள், அளவுக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டார்;
பழனிசாமி முதல்வர் ஆனார்.அதன் பின், அவர் கணவர் நடராஜன், தம்பி திவாகரன் ஆகியோர், முதல்வர் நாற் காலியைப் பிடிக்க, சில நாட்கள், திரை மறைவு வேலை களில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், அவர்களை விஞ்சும் வகையில், சசியின் அக்கா மகன் தினகரன், தனக்கு ஆதரவான, எம்.எல்.ஏ.,க்களை திரட்டினார்.
இது பிடிக்காத பழனிசாமி, பன்னீரை தன்னுடன் இணைத்து, தனக்கு ஆதர வாகச் செயல்படும், எம்.எல்.ஏ., க்களை அணி திரட்டினார்.
அ.தி.மு.க.,வின், 135 எம்.எல்.ஏ., க்களில், 19 பேர், தினகரனு டன் ஐக்கிய மாகினர்;
ஆக., 22ல், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல் வருக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாக, கடிதம் கொடுத்தனர்.
அவர்களை தகுதி நீக்கம் செய்யும் படி, அரசு கொறடா ராஜேந்திரன், ஆக., 24ல், சபாநாயகர் தனபாலு க்கு பரிந்துரை செய்தார்.
அதை ஏற்று, எம்.எல்.ஏ., க்களிடம் விளக்கம் கேட்டு, சபாநாயகர், 'நோட்டீஸ்' அனுப்பினார்.
அவகாசம் கோரி, மனு
அதற்கு, அவர்கள் இடைக் கால பதிலளித் தனர். இதற்கி டையில், 'பழனிசாமி அரசு பெரும் பான்மையை இழந்து விட்டது.
எனவே, சட்ட சபையை கூட்டி, பெரும் பான்மையை நிரூபி க்கும்படி, முதல்வரு க்கு உத்தர விட
வேண்டும்' என, எதிர்க் கட்சிகள், கவர்னரை சந்தித்து வலி யுறுத்தின. ஆனால், 'இது, உட்கட்சி விவகாரம்' என, கவர்னர் கை விரித்தார்.
இந்த சூழ்நிலை யில், 'தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ., க்கள், முழுமை யான விளக்கம் அளிக்க வேண்டும். செப்., 7ல், நேரில் ஆஜராக வேண்டும்' என, சபாநாயகர், மீண்டும் நோட்டீஸ் அனுப்பினார்.
அதை யடுத்து, தினகரன் அணியைச் சேர்ந்த ஜக்கையன், திடீரென்று சபா நாயகர் முன் ஆஜராகி, முதல்வர் பழனி சாமியை ஆதரிப்ப தாக தெரிவித்தார்.
அதன் தொடர்ச்சி யாக, செப்., 5ல், எம்.எல்.ஏ., க்கள் கூட்டத்தை, முதல்வர் பழனிசாமி கூட்டினார்.
சென்னை யில் நடந்த கூட்ட த்தில், 109 எம்.எல்.ஏ., க்கள் பங்கேற்றனர்; தினகரன் ஆதரவா ளர்கள் புறக்கணி த்தனர்.
மேலும், தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், சபா நாயகரிடம் அவகாசம் கோரி, மனு கொடுத்தனர். அதை ஏற்று, செப்., 14ல், தனித் தனியே நேரில் ஆஜராக, சபாநாயகர் உத்தர விட்டார்.
தகுதி நீக்கம்
அதன் படி அன்று, தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ., வெற்றிவேல் மட்டும் ஆஜரானார்; மற்ற யாரும் ஆஜராக வில்லை.
அவர்கள் சார்பில், வழக்கறிஞர் ஆஜராகி, சில ஆவணங்கள் கேட்டு, கடிதம் கொடுத்தார்.
இந்நிலை யில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தக் கோரி, தி.மு.க., சார்பில், சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது; அந்த வழக்கில், தினகரன் தரப்பும் இணைந்து கொண்டது.
இவ்வழக்கு, விசாரணை யில் உள்ள நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால், நேற்று உத்தர விட்டார்.
இது தொடர் பாக, சட்டசபை செயலர், பூபதி வெளியிட்ட அறிக்கை யில், '1986ம் ஆண்டு, தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் களின், கட்சி மாறுதல் காரண மாக,
தகுதி யின்மை யாக்குதல் விதியின் கீழ், சபாநாயகர், 18 எம்.எல்.ஏ. ,க்களை, செப்., 18 முதல், தகுதி நீக்கம் செய்து உத்தர விட்டு ள்ளார்.
அதனால், 18 எம்.எல்.ஏ., க்களும், தங்கள் பதவியை இழந்து ள்ளனர்' என, தெரிவித் துள்ளார்.
எம்.எல்.ஏ., க்கள் நீக்கம் அரசித ழிலும் நேற்று வெளியிடப் பட்டது.தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள்,
18 பேர் தகுதி நீக்கம் செய்யப் பட்டுள்ள தால், முதல்வர் பழனிசாமி தலைமை யிலான அரசுக்கு, தற்போது பெரும் பான்மை கிடைத்துள்ளது.
இதை யடுத்து, 'பழனி சாமியுடன் இணக்க மாகச் செயல்பட்டு, ஆட்சியைப் பிடிக்க லாம் அல்லது,
தி.மு.க., கூட்டணி, எம்.எல்.ஏ., க்களுடன் இணைந்து, ஆட்சியை கவிழ்க்க லாம்' என்ற, தினகரனின் எண்ணம் தவிடு பொடியாகி விட்டது.
துணிச்சல் பின்னணி
உத்தரகண்ட் மாநில த்தில், காங்., - எம்.எல்.ஏ.,க்கள் ஒன்பது பேர், 2016 மார்ச் மாதம், அப்போதைய முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர்;
அவர்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இதை எதிர்த்து, அந்த எம்.எல்.ஏ., க்கள், உத்தரகண்ட் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர் ந்தனர்.
இந்த வழக்கில், 'எம்.எல்.ஏ., க்கள் தகுதி நீக்கம் செல்லும்' என, நீதிமன்றம் தீர்ப்ப ளித்தது. அதன் அடிப்படை யில், சபாநாயகர் தனபால், தற்போது, 18 பேரை நீக்கி யுள்ளார்.
19 தொகுதிகள் காலி
தமிழக த்தில், ஜெ., மறைவு காரண மாக, 2016 டிச., 5 முதல், சென்னை, ஆர்.கே. நகர் சட்டசபை தொகுதி காலி யாக உள்ளது.
தற்போது, நேற்று, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை, தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால் உத்தர விட்டார். அதனால், அவர்கள் வெற்றி பெற்ற, 18 சட்டசபை தொகுதி களும் காலி யானது.
இது குறித்து, சட்டசபை செயலகம் சார்பில், முறைப்படி தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பப் பட்டு உள்ளது.
எனவே, தமிழகத்தில், காலியாக உள்ள சட்ட சபை தொகுதி களின் எண்ணிக்கை, 19 ஆக உயர்ந் துள்ளது
இது நாலாவது முறை!
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., க்கள், இரண்டாவது முறை யாக, தகுதி நீக்கம் செய்யப் பட்டு உள்ளனர்.
* தமிழக சட்ட சபையில், தகுதி நீக்கம் சம்பவம், நான்கு முறை நடந்து ள்ளது. 1986ல், தி.மு.க., சார்பில், அரசியல் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.
அதில் பங்கேற்ற, தி.மு.க., தலைவர் கருணாநிதி உட்பட, 10 எம்.எல்.ஏ., க்களை, தகுதி நீக்கம் செய்து, அப்போது சபா நாயராக இருந்த, பி.எச். பாண்டியன் உத்தர விட்டார்
*எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிளவு பட்டது. பெரும் பான்மை, எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவுடன், ஜானகி முதல்வராக பதவி ஏற்றார்.
1988ல், அவர் பெரும் பான்மையை நிரூபிக்க, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. அப்போது, அரசு கொறடா உத்தரவை மீறியதாக, ஜெ.,
அணியைச் சேர்ந்த, 33 எம்.எல்.ஏ., க்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாய ராக இருந்த, பி.எச். பாண்டியன் உத்தர விட்டார்.
* கடந்த, 2013ல், சபையில் ஒழுங்கீன மாக நடந்து கொண்ட தற்காக, தே.மு.தி.க., - எம்.எல்.ஏ., க்கள் ஆறு பேரை, ஓராண்டு தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தர விட்டார்
* தினகரன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள், 18 பேரை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் தனபால், நேற்று உத்தர விட்டார்.
தமிழக சட்ட சபையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தகுதி நீக்கம் செய்யப் பட்டிருப்பது, இது இரண் டாவது முறை.
Thanks for Your Comments