சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தற்போது சாதாரண, சொகுசு, ஏசி என பல வகையான பேருந்துகள் இயக்கப் படுகின்றன.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் செலவைக் குறைக்கும் வகையில் பேட்டரி மூலம் ஓடும் பேருந்துகளை சென்னையில் இயக்க, தமிழக போக்கு வரத்துத்துறை திட்ட மிட்டுள்ளது.
இதற்கான உரிமம் பெறும் பணியில் மாநகர போக்கு வரத்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கான உரிமம் பெறும் பணியில் மாநகர போக்கு வரத்து அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து அதிகாரிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் சிக்கனத்தைக் கடை பிடிக்கும் வகையில் மாநகர போக்கு வரத்துக் கழகத்தில் முதல் கட்டமாக பேட்டரிகள் மூலம் ஓடும் 250 பேருந்து களை இயக்க வுள்ளோம்.
2 சிசிடிவி கேமராக்கள், தீயணைப்பு கருவிகள், ஜிபிஎஸ், தானியங்கி கதவு உள்ளிட்டவை இடம் பெறும். ஒவ்வொரு பேருந்திலும் 3 தொகுப்பு பேட்டரிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுப்பிலும் மொத்தம் 26 பேட்டரிகள் இருக்கும்.
ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வுள்ளோம் என்றனர்.
ஒரு தொகுப்பு பேட்டரியை ஒரு முறை சார்ஜ் செய்தால் 50 கிமீ வரை பயணம் செய்யலாம். ஜனவரியில் தியாகராய நகர், பிராட்வே, தாம்பரம் பகுதிகளில் சோதனை முறையில் இயக்க வுள்ளோம்.
ஓட்டுநர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வுள்ளோம் என்றனர்.
Tags:
Thanks for Your Comments