தமிழகம், புதுவையில் அடுத்த 5 நாட்களுக்குக் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் இறுதியில் தொடங்கிய திலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட
வட மாவட்டங்களிலும், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்தது.
இதனால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பல லட்சம் ஏக்கர் விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கின. தமிழகம் முழுவதும் இதுவரை 1,379 ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன.
சென்னை மாவட்டத்தில் உள்ள 2 ஏரிகளும் (வேளச்சேரி, கொளத்தூர்), காஞ்சிபுரம் மாவட்டத்தில் 239 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்ட த்தில் 217 ஏரிகளும் நிரம்பியுள்ளன.
இந்த இரண்டு நாட்களாக மழை குறைந்தி ருக்கிறது. இந்நிலையில் ஐந்து நாள் களுக்குத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித் துள்ளது.
குறிப்பாக, வட மாவட்டக் கடலோரப் பகுதிகளில் மழை அதிகப் படியாகப் பெய்யும் என்றும், மாநிலத்தில் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித் துள்ளது.
இன்று (நவம்பர் 12) காலை தி.நகர், மயிலாப்பூர், கிண்டி, திருவல்லிக்கேணி பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இதனிடையே தமிழக கடலோர பகுதி களில் வரும் 16ஆம் தேதி வரை மிக கன மழைக்கு வாய்ப் புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவி த்துள்ளது.
இதேபோல் சென்னை, காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டங் களில் இன்று முதல் 3 நாள்கள் மீண்டும் பலத்த மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் தெரிவித் துள்ளது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments