துபாயில் வசிக்கும் 12 வயது இந்திய சிறுமி சுசிதா சதிஷ், ஒரே மேடையில் 85 மொழி களில் பாடத் திட்ட மிட்டுள்ளார்.
இதன் மூலம் ஏற்கெனவே உள்ள கின்னஸ் சாதனையை அவர் முறியடிப் பாரா என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது.
துபாயில் உள்ள தி இந்தியன் ஹை ஸ்கூலில் 7-ம் வகுப்பு படிக்கிறார் சுசிதா சதிஷ். கேரளாவைப் பூர்வீக மாகக் கொண்ட
அவர் வரும் டிசம்பர் 29 அன்று ஒரே மேடை யில் 85 மொழிகளில் 85 விதமான பாடல் களைப் பாடத் திட்ட மிட்டுள்ளார்.
இது குறித்துப் பேசும் சுசிதா, ''ஒரு வருடத்தில் 80 மொழி களில் பாடல்கள் பாடக் கற்றுக் கொண்டேன். கூடிய விரைவில் புதிதாக 5 மொழி களைக் கற்று, கின்னஸ் சாதனை நிகழ்த்த உள்ளேன்.
முதன் முதலில் ஜப்பானிய மொழியில் தான் பாடல் கற்றுக் கொண்டேன். ஒரு வருடத் துக்கு முன்பு என் தந்தையின் ஜப்பானிய தோழி வீட்டுக்கு வந்தார்.
அவர் ஜப்பானிய மொழியில் பாடல் பாடினார். எனக்கு அப்பாடல் பிடித்துப் போகவே அவரிட மிருந்து அதைக் கற்றுக் கொண்டேன்.
பொதுவாக ஒரு மொழிப் பாடலைக் கற்றுக் கொள்ள எனக்கு 2 மணி நேரம் ஆகும். ஃப்ரெஞ்சு, ஹங்கேரியா மற்றும் ஜெர்மானிய பாடல்கள் எனக்கு மிகவும் கடின மான இருந்தன.
ஆனால் முறைப் படி அவற்றைக் கற்ற நான், 85 மொழிப் பாடல்களைப் பாடி விரைவில் கின்னஸ் சாதனையை முறியடிக்க உள்ளேன்'' என்றார்.
முன்னதாக ஆந்திர மாநிலம் காந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கேசிராஜு ஸ்ரீனிவாஸ், 2008-ல் 76 மொழிகளில் பாடல் களைப் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்தி யிருந்தது குறிப்பிடத் தக்கது.
இது தொடர் பான செய்தியை கல்ஃப் செய்தித் தாள் வெளியிட் டுள்ளது.
Thanks for Your Comments