மத்திய அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடும் விமர்சனங்களை வைத்து வரும் நடிகர் பிரகாஷ் ராஜ்,
திரைப்பட நடிகர்கள் தலைவர்களாவது என் நாட்டுக்குப் பேரழிவை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இன்று (நவ.,12) பத்திரிகை யாளர்களைச் சந்தித்த பிரகாஷ் ராஜ் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பாக தனது கருத்து களை தெரிவித்தார்.
திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர் களானால் நாட்டிற்கு பேரழிவு. நடிகர்கள் அரசியலு க்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப் போவ தில்லை.
ரசிகர்களின் விருப்பங்களை மனதில் கொண்டு நடிகர்கள் பொறுப்பு களை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறி யுள்ளார்.
அதே போல் திரையரங்கு களில் தேசிய கீதம் இசைக்கப் படும் போது எழுந்து நின்று மரியாதை செலுத்துவது பற்றி பிரகாஷ்ராஜ் கூறும் போது,
சினிமா ஹால்களில் எழுந்து நின்று தான் ஒருவர் தனது தேசப் பற்றைக் காண்பிக்க வேண்டும் என்று நான் கருத வில்லை என்று தெரிவித் துள்ளார்.
சமீபத்தில், பிரதமர் மோடி, உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் மீது விமர்சனம் வைத்த பிரகாஷ் ராஜ்.
தன்னை விட இவர்கள் இருவரும் சிறந்த நடிகர்கள் என்றும் 5 தேசிய விருதுகளுக்குத் தகுதி யானவர்கள் என்று விமர்சித்ததை யடுத்து லக்னோ நீதிமன்றத்தில் இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments