இந்தியாவி லிருந்து ஆப்கானிஸ்தா னுக்கு சபகர் துறைமுகம் வழியாக முதல் லோடு கோதுமை வெற்றிகரமாகச் சென்றடைந்தது.
இந்தியாவி லிருந்து ஆப்கானிஸ்தா னுக்கு சரக்குப் பொருட் களை அனுப்ப பாகிஸ்தான் அனுமதி மறுத்து வந்த நிலையில்,
இரு நாடுகளு க்கும் இடையே வணிகம் செய்ய மாற்று வழிகளைப் பயன் படுத்த இந்தியா முயற்சி செய்து வந்தது.
இதன் ஒரு பகுதியாகக் குஜராத்தின் காண்ட்லா துறை முகத்தி லிருந்து, ஈரான் நாட்டில் அமைக்கப் பட்டுள்ள சபகர் துறைமுகம் வழியாக
இந்தியாவி லிருந்து ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு முதல் லோடு கோதுமை அக்டோபர் 29ஆம் தேதியன்று அனுப்பி வைக்கப் பட்டது.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜும் ஆப்கானிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சலஹுதின் ரபானியும் கொடியசைத்து சரக்கு கப்பலை அனுப்பி வைத்தனர்.
இந்நிலை யில் நவம்பர் 11ஆம் தேதி ஆப்கானிஸ்தான் நாட்டின் சரஞ் நகருக்கு வெற்றிகர மாக இந்திய கோதுமை சென்றடைந் துள்ளது.
இதை ஆப்கானிஸ்தான் நாட்டுக் கான இந்தியத் தூதரான மன்பிரீத் வோக்ரா தனது டிவிட்டர் பக்கத்தில் வெளி யிட்டுள்ள செய்தி யின் மூலம் உறுதி செய்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு 11 லட்சம் டன் அளவிலான கோதுமையை இந்தியா விநியோகிக்க அளித்துள்ள ஒப்புதலின் முதற் கட்டமாக தற்போது கோதுமை அனுப்பப் பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments