சென்னை வர்த்தக மையத்தில் ஆட்டோமோட்டிவ் கண்காட்சி !

0
சென்னை வர்த்தக மையத்தில் ஆட்டோமோட்டிவ் இன்ஜினீயரிங் தொழில் நுட்ப பொருட்களுக்கான கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்தக் கண் காட்சியை தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்.
சென்னை வர்த்தக மையத்தில் ஆட்டோமோட்டிவ் கண்காட்சி !
நேற்று தொடங்கிய கண்காட்சி மூன்று நாட்கள் (நவ.9&10&11) நடைபெற இருக்கிறது. சுமார் 75-க்கும் மேற்பட்ட நிறுவ னங்கள் இந்தக் கண் காட்சியில் பங்கேற்று உள்ளன. 

மிட்சுபிஷி, போஷ், நிக்கான், பானாசோனிக் போன்ற பன்னாட்டு நிறுவ னங்கள் இந்த கண் காட்சியில் பங்கேற்று ள்ளன. 

ரோபாடிக்ஸ் சார்ந்த ஆட்டோமோட்டிவ் தொழில் நுட்பம், 3டி பிரிண்டர்ஸ் சார்ந்த ஆட்டோமோட்டிவ் தொழில் நுட்பம் போன்றவை இந்த கண் காட்சியில் முக்கிய இடம் பிடித்துள்ளன.

கண் காட்சியை தொடங்கி வைத்து அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது: 

2015-ம் ஆண்டில் உலக முதலீட்டாளர் மாநாடு நடந்தது போலவே 2018-ம் ஆண்டு உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்படும். தமிழகத்தில் ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் அதிகம் இருக்கின்றன. 
ஒவ்வொரு 30 விநாடிக்கும் ஒரு கார் அல்லது வர்த்தக வாகனங்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. ஒற்றை சாளர முறையில் தொழில் நிறுவனங் களுக்கான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 

மேலும் அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings