பெங்களூருவில் போலீஸ் காரர் ஒருவர் மாமூலாக கடலை கேட்டு வியாபாரிகளை நச்சரித்த காட்சி சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலானது.
அந்த காட்சியை பதிவேற்றிய நபர், பிச்சை எடுப்பதில் புதிய முறையை கண்டு பிடித்த போலீஸ் என பதிவிட்டு அந்த வீடியோவை சமூக வலை தளத்தில் பகிர்ந்தார்.
பெங்களூரு வடக்கு ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த துணை தலைமைக் காவலர் மண்டக்கி. இவருக்கு பசவனகுடி பகுதியில் பணி ஒதுக்கப் பட்டிருந்தது.
பணியில் சீருடையில் இருந்த அவர் சந்தை ஒன்றுக்குள் நுழைந்து கையிலி ருந்த பிளாஸ்டிக் பையை விரித்தபடி ஒவ்வொரு கடையாகச் சென்று வியாபாரி களிடம் அதில் கடலையை நிரப்புமாறு மிரட்டினார்.
இதை அங்கிருந்த நபர் ஒருவர் தனது செல்ஃபோனில் வீடியோ வாக பதிவு செய்தார். பின்னர், அந்த வீடியோவை அவர் சமூக வலை தளத்தில் பதிவேற்றி னார். இந்த வீடியோ வைர லானது.
இதனைப் பார்த்த உயர் அதிகாரிகள் டிசிபி திம்மனவர் தலைமை யில் ஒரு குழுவை அமைத்து விசாரணை க்கு உத்தர விட்டனர்.
விசாரணை யில் உதவி தலைமை காவலர் மண்டக்கி தவறு செய்தது உறுதி யானது. இதனை யடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டார்.
Thanks for Your Comments