மும்பை, நிழலுலக தாதா, தாவூத் இப்ராகிமுக்கு சொந்த மான, மூன்று சொத்து கள், 12 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப் பட்டன.
மஹாராஷ்டிர மாநிலம், மும்பை யில், 1993ல், தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன; இதில், 257 பேர் உயிரி ழந்தனர்.
தேடப்படும் குற்றவாளி :
இந்த குண்டு வெடிப்புக்கு, மூளையாக செயல் பட்டவன், நிழலுலக தாதா, தாவூத் இப்ராகிம், 61. இந்தியா
உள்ளிட்ட பல்வேறு நாடுகளால், தேடப்படும் குற்றவாளி யாக அறிவிக்கப் பட்டவர்.
போலீசாரின் தேடுதல் வேட்டைக்கு பயந்து, தற்போது, பாகிஸ்தானில் தலை மறைவாக உள்ளார். இவருக்கு சொந்த மான சொத்துகள்,
மும்பையில் பல இடங்களில் உள்ளன. சட்ட விரோதமாக, தாவூத் சம்பாதித்த இந்த சொத்து களை, மத்தியஅரசு முடக்கி வைத்து உள்ளது.
அறக்கட்டளை :
இந்நிலை யில், தாவூத்து க்கு சொந்த மான மும்பை யில் உள்ள, ஓட்டல் ரவுனாக்
அப்ரோஸ்,ஷப்னம் விருந்தினர் இல்லம், தாமர்வாலா கட்டடம் ஆகிய, 3 சொத்து களை, மத்திய நிதி அமைச்சகம்,நேற்று ஏலம் விட்டது.
சாய்பீ பர்கானி அறக் கட்டளை என்ற அமைப்பு, மூன்று சொத்து களையும், 12 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
Thanks for Your Comments