தீவிரவாதியை விரும்பவில்லை... ஹாதியாவின் தந்தை !

0
ஹாதியாவின் தந்தை அசோகன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது: உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண் காணிப்பில் எனது மகள் படிப்பைத் தொடர உள்ளார்.
தீவிரவாதியை விரும்பவில்லை... ஹாதியாவின் தந்தை !
இந்த தீர்ப்பை வரவேற் கிறேன். அவளது பாதுகாப்பு குறித்து கவலைப் படவில்லை. அதை உச்ச நீதி மன்றமே கவனித்து கொள்ளும். நான் உட்பட நெருங்கிய குடும்ப உறுப்பி னர்கள் மட்டுமே ஹாதி யாவை சந்திக்க முடியும்.

எனது குடும்பத் தில் தீவிரவாதியை விரும்ப வில்லை. கட்டாய மதமாற்ற திருமண த்துக்குப் பிறகு அவரை சிரியா அழைத்துச் செல்ல திட்ட மிட்டிருந் தனர். சிரியாவை பற்றி அகிலாவுக்கு எதுவுமே தெரியாது. 

எனது வீட்டில் மகளை நான் வீட்டுச் சிறையில் வைத்தி ருந்ததாக கூறுவது தவறு. அவர் போலீஸ் பாது காப்பில் மட்டுமே இருந்தார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே டெல்லி விமான நிலையத்தில் ஹாதியா கூறிய போது, சேலத்தில் எனது கணவர் ஷபின் ஜகானை சந்திப்பேன் என நம்புகிறேன் என்று தெரிவி த்தார்.
ஷபின் ஜகான் கூறிய போது, என்ஐஏ கூறுவது போன்று நான் தீவிரவாதி கிடையாது. என் மீது அபாண்ட மாக குற்றம் சாட்டப் படுகிறது. எனது மனை வியை சந்திக்க முடியும் என்று நம்பு கிறேன் என்றார்.

ஷபின் ஜகானின் வழக்கறி ஞர்கள் கூறிய போது, உச்ச நீதிமன்ற உத்தரவை முழுமை யாக ஆய்வு செய்து அதற்கேற்ப செயல் படுவோம் என்று தெரிவி த்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings