கோவை மாவட்டம் மேட்டுப் பாளையம் சிறுமுகையை சேர்ந்தவர் ஓ.ஆறுமுகசாமி. மணல் வியாபாரி. இவருக்கு செந்தில் என்ற மகனும், கவிதா, கல்பனா என்ற இரு மகள்களும் உள்ளனர்.
தற்போது, ஆறுமுகசாமி கோவை ரேஸ் கோர்சில் தனது மகள் கல்பனா, மகன் செந்திலுடன் வசித்து வருகிறார். கடந்த காலங் களில் ஆறுமுகசாமி மணல் வியாபாரம் செய்து வந்தார்.
மேலும், மகன் செந்திலுடன் இணைந்து செந்தில் கன்ஸ்ட்ரக்சன் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவன ங்களை நடத்தி வருகிறார். இது தவிர, தொழில் ரீதியாக சசிகலா, தினகரன் குடும்பத் தினருடன் தொடர்பு வைத் திருந்தனர்.
ரேஸ் கோர்சில் உள்ள ஆறுமுக சாமியின் வீட்டுக்கு நேற்று அதிகாலை 6 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் வந்தனர். பின்னர், வீட்டுக்குள் புகுந்து சோதனை நடத்தினர்.
அப்போது ஆறுமுக சாமி, மகள் கல்பனா, மருமகன் தீன தயாளன் உள்ளிட்டோர் இருந்தனர். இதனிடையே, ஆறுமுக சாமியின் ராம்நகர் அலுவலகம், அவினாசி சாலை செந்தில் காம்ப்ளக்ஸ் அலுவலகம், ராம்நகரில் உள்ள
இரு சினிமா தியேட்டர், அன்னூர் அருகே பண்ணை வீடு மற்றும் பவானி சாகரில் உள்ள பேப்பர் ஆலை என ஆறுமுக சாமிக்கு சொந்தமான 6 இடங் களில் அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர்.
அதிகாலை 6 மணி முதல் மாலை 6.30 மணி வரை சோதனை நீடித்தது.
சோதனை யின் போது கல்பனா, தீன தயாளன் ஆகியோரை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தங்களது அலுவலக த்தில் வைத்து அதிகாரிகள் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
பல ஆவணங் களில் கையெழுத்து பெற்றனர். சோதனையின் போது முக்கிய ஆவண ங்கள் கைப்பற்றப் பட்டதாக தெரிகிறது. ரொக்க ப்பணம் எவ்வளவு சிக்கியது என்ற விவரம் வெளியிடப்பட வில்லை.
Thanks for Your Comments