இழுத்தடித்துக் கொண்டிருந்த இரட்டை இலை சின்ன விவகாரம், ஒரு வழியாக, விசாரணை படலத்தை முடித்து, தீர்ப்புக்காக காத்திருக்க துவங்கி யுள்ளது.
இரட்டை இலை, Irattai ilai, ஜெயலலிதா மறைவு, Jayalalithaa death, அ.தி.மு.க., AIADMK, தேர்தல் ஆணையம், Election Commission, சசிகலா, Sasikala, தினகரன், Dinakaran,
வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, Advocate Vijay Hanjaria, வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, Advocate Abhishek Singhvi, பழனிசாமி ,Palanisami, பன்னீர் செல்வம், Panneerselvam,வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, Advocate Mukul Rohatki,
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அ.தி.மு.கவில் ஏற்பட்ட அத்தனை பிரச்னைகளும் எப்போது முடிவுக்கு வருமென்ற ஏக்கத்துடனேயே, அக்கட்சியின் மூத்த தலை வர்களில் துவங்கி, அடிமட்டத் தொண்டர்கள் வரையில் உள்ளனர்.
நம்பிக்கை
தங்களது அத்தனை பிரச்னை களுக்கும், சர்வரோக நிவாரணியாக இவர்கள் கருதுவது, இரட்டை இலைச் சின்னம். காரணம், சின்னம் தான் கட்சியை காப்பாற்றும்,
தங்களது அரசியல் எதிர் காலத்தை நிர்ணயிக்கும் என, அத்தனை பேரும் நம்பு கின்றனர்.
அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை இலைச் சின்னத்தை யாருக்கு தரலாம் என்பதை முடிவு செய்ய, அக்., 6ம் தேதி, தலைமைத் தேர்தல் ஆணையம், தன் விசாரணையை துவங்கியது.
நிலைமை சாதக மில்லை என்பதால், விசாரணையை இழுத் தடிப்பது ஒன்றே நோக் கம் என்ற ரீதியில் சசிகலா, தினகரன் தரப்பு வழக்கறிஞர்கள் வாதாடிய தால், அடுத்தடுத்து விசார ணைகள் ஒத்தி வைக்கப் பட்ட படியே இருந்தன.
கடைசியாக நடந்தஇரு விசாரணைகளில், தினகரன் வழக்கறிஞர், விஜய் ஹன்சாரியாவும், சசிகலா வழக்கறிஞர், அபிஷேக் சிங்வியும் ஒரு வழியாக தங்களது வாதங்களை பேசி முடித்த உடன் தான்,தேர்தல் ஆணையர்களுக்கே தெம்பு வந்தது.
இந்நிலை யில், நேற்று, இறுதி கட்ட பதில் வாதங் களுக்காக, பழனிசாமி - பன்னீர் செல்வம் தரப்புக்கு வாய்ப்பு வழங்கப்படு மென அறிவிக்கப் பட்டு இருந்தது.
அதன்படி நடந்த விவாதத்தை துவக்கிய வழக்கறிஞர், முகுல் ரோஹத்கி, ஜெ., வின் மறை வுக்கு பின் நடந்த பல்வேறு சம்பவங் களை விளக்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
பிளவுகள் ஏற்படும் பட்சத்தில், பெரும் பான்மை, எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ள அணிக்கே சின்னம் வழங்கப்பட வேண்டும்.
இந்த அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம், இது வரை தீர்ப்பு களை வழங்கியுள்ளது. இதன்படி பார்த்தால், எங்களுக்கே சின்னம் கிடைக்க வேண்டும்.
ஜெயலலிதா வால் நடவடிக்கை எடுக்கப்பட்டு கட்சிக்கே சம்பந்தம் இல்லாத வர்கள் தான், சசிகலாவும் தினகரனும். இவர்கள், தங்கள் சுயலாபத் திற்காக, திடீரென கட்சியை கைப்பற்றி விட நினைக்கின்றனர்.
இறுதி முடிவு
கடந்த, 2016ம் ஆண்டு, டிச., 5ம் தேதி நிலவரப் படி, 168 பேர் ஆதரவு மட்டுமே இவர்களு க்கு இருந்தது. தற்போதும், வெகுசிலரை தவிர, ஒட்டு மொத்த கட்சியுமே, பழனிசாமி - பன்னீர் செல்வம் பின்னால் நிற்கிறது.
ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம், சசிகலா தரப்பில் போதுமான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், அந்த ஆவணங்கள் அனைத்துமே, தற்போதைய சூழ்நிலைக்கு முற்றிலும் எதிராக உள்ளன.
காரணம், ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவர், சசிகலா. அவரை முன்னி றுத்தியோ, அவரது முகத்தை காட்டியோ, தேர்தலில் ஒரு ஓட்டு கூட வாங்க முடியாது என்று ஒவ்வொரு தொண்டரும் கருதுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
செம்மலை தரப்பு வழக்கறிஞர், விஸ்வநாதன், ''விசாரணையை சீர்குலை க்கும் வகையில் தொடர்ந்து சசிகலா தரப்பு செயல்படுகிறது.
சின்னத்தை முடக்க வேண்டு மென்பதே அவர்களது ஒரே நோக்கம். ''சின்னம், ஒட்டு மொத்த கட்சியும் ஒரு புறமிருக்க, ஒரு சிலர் செய்யும்
பிரச்னைகளால் தான் இரட்டை இலைச் சின்னம் முடங்கிய நிலையில் உள்ளது. 'கடந்த காலங் களில் என்ன வேண்டு மானலும் நடந்திருக் கலாம்.
ஆனால், தற்போது என்ன சூழ்நிலை கட்சிக்குள் நிலவு கிறதோ, அதை வைத்து தான், தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இறுதி யில், அனைத்து வாதங் களும் முடி வடைந்த தாகவும், வேறு ஏதேனும் தெரிவிக்க விரும்பி னால், இரு தரப்பும் எழுத்துப் பூர்வமாக,
வரும் திங்கட் கிழமை க்குள் வழங்கும் படியும் கூறி, தேதி குறிப்பி டாமல், தீர்ப்பை, தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. இதன் மூலம், விசாரணைப் படலம் முடிவுக்கு வந்தது.
போன வாரம்... இந்த வாரம்!
சசிகலா ஆதரவு, எம்.பி.,க்கள், நவநீத கிருஷ்ணன், விஜிலா சந்தியானந்த், கோகுல கிருஷ்ணன் மூவரையும் பதவி நீக்கம் செய்யும்படி
கடந்த வாரம் ராஜ்யசபா செயலரை, பன்னீர் செல்வம் ஆதரவா ளர்கள், முனுசாமி, மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், விஸ்வநாதன் ஆகியோர் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இதே குழு, இதே கோரிக்கை யுடன், ராஜ்யசபா தலைவரும் துணை ஜனாதிபதியு மான, வெங்கையா நாயுடுவை நேற்று சந்தித்து வலியுறுத் தியது.
Thanks for Your Comments