தாவரங் களைத் தின்று சேதப் படுத்திய கழுதைகள் நான்கு நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டன. உத்தர பிரதேச த்தில் இந்த விநோத சம்பவம் நடந் துள்ளது.
உத்தர பிரதேசத் தில் ஜாலோன் மாவட்ட த்தில் உள்ள ஓரை என்ற இடத்தில் மாவட்ட சிறை வளாகத்தில் அழகுக் காக தாவரங்கள், மரக்கன்று கள் வைக்கப் பட்டுள்ளன.
கடந்த 24-ம் தேதி சிறை வளாகத்தில் புகுந்த 8 கழுதைகள் தாவரங் களைத் தின்று சேதப் படுத்தின.
மூத்த சிறை அதிகாரி களின் உத்தரவின் பேரில் இந்தக் கழுதை களை போலீஸார் சுற்றி வளைத்து சிறையில் அடைத்தனர்.
இந்தக் கழுதைகள் கமலேஷ் என்பவ ருக்கு சொந்த மானது. தனது கழுதைகள் சிறையில் அடைக்கப் பட்டதை
அறிந்த கமலேஷ், சிறையின் உயர் அதிகாரி களைச் சந்தித்தார். கழுதை களை விடுவிக் குமாறு கோரினார்.
இதற்கு மறுத்த சிறை அதிகாரிகள் அவரை பின்னர் வருமாறு விரட்டினர்.
இதைத் தொடர்ந்து உள்ளூர் பாஜக தலைவரை சந்தித்து கமலேஷ் முறை யிட்டார்.
மாவட்ட சிறைக்கு கமலேஷுடன் வந்த பாஜக தலைவர், சிறை அதிகாரி களுடன் பேசினார்.
‘இனி கழுதை களை வசிப்பிடங் களிலும், பொது முக்கிய த்துவம் வாய்ந்த இடங்களி லும்
சுற்றித் திரிய விடமாட்டேன்’ என்று கமலேஷ் போலீஸாரிடம் எழுதிக் கொடுத்தார்.
இதை யடுத்து, நான்கு நாட்க ளாக சிறையில் அடைக்கப் பட்டிருந்த கழுதைகள் விடுதலை செய்யப் பட்டன.
எச்சரித்தும் பயனில்லை. சிறையின் தலைமை கான்ஸ்டபிள் ஆர்.கே. மிஸ்ரா கூறுகை யில்,
‘‘60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தாவரங் களைக் கழுதைகள் தின்றும் கடித்தும் சேதப் படுத்தின.
‘‘60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தாவரங் களைக் கழுதைகள் தின்றும் கடித்தும் சேதப் படுத்தின.
பலமுறை எச்சரித்தும் கழுதை களின் உரிமை யாளர் அவற்றை கட்டுப் படுத்த வில்லை.
எனவே, அதிகாரி களின் உத்தரவின் பேரில் கழுதை களைச் சிறையில் அடைத்தோம்.
பல சமயங் களில் சாலை விபத்துக் களுக்கும் இந்தக் கழுதைகள் காரண மாக இருந்துள்ளன’’ என்றார்.
Thanks for Your Comments