கொள்ளைக்கு கும்பல் தலைமை திவாகரன் !

0
கோடி கோடியாய், சசி கும்பல் அடித்த கொள்ளைக்கு, சசிகலாவின் தம்பி, திவாகரன், மூளையாகவும், தலைமை யாகவும் இருந்துள்ள தகவல், வருமான வரித்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கொள்ளைக்கு கும்பல் தலைமை திவாகரன் !
கோடிகளை கொட்டி, பல காற்றாலைகளை வாங்கி குவித்ததும், விசாரணையில் அம்பலம் ஆகியுள்ளது. 

முறை கேடுகளை மறைக்க துவக்கப்பட்ட, போலி கம்பெனிகளில், இளவரசியின் வாரிசுகள், விவேக், ஷகிலா, கிருஷ்ண பிரியா ஆகியோருக்கு, 

முக்கியபங்கு இருப்பதை கண்டுபிடித்த வரித்துறை அதிகாரிகள், சசி குடும்பத்தினர் வீடுகளில் கிடைத்த, வைரக் குவியலை மதிப்பிட முடியாமல் திணறு கின்றனர்.

சசிகலா கும்பல், திவாகரன், வருமான வரித்துறை, காற்றாலை, போலி கம்பெனி, விவேக், ஷகிலா, கிருஷ்ண பிரியா,  ஜாஸ் சினிமாஸ், விண்ட் மில் சுப்ரமணியன், ஊழல் பணம், மிடாஸ் மதுபான ஆலை, செங்கமல தாயார் கல்லுாரி, 

கொள்ளைதமிழகம் முழுவதும், சசிகலாவின் சொந்தங்கள், துாரத்து உறவுகள், பினாமிகள், போலி நிறுவனங்கள் என, 200க்கும் மேற்பட்ட இடங்களில், ஒரே நேரத்தில், நவ., 9ல், அதிரடி சோதனை துவங்கியது.

அதிகாரமிக்க தலைவர்
இச்சோதனை குறித்து, வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரிகள், நேற்று கூறியதாவது: சசி கும்பல், மோசடி வழியில் சம்பாதித்த பணம் மற்றும் சொத்துகளை, எங்கு முதலீடு செய்வது; 

யாருக்கு, அதை பிரித்து தருவது என்பது போன்ற முக்கிய முடிவு களை, சசிகலா வின் தம்பி திவாகரன் தான் எடுத்துள்ளார்.

அவர் தான், 'ஜாஸ் சினிமாஸ்' மற்றும் சில நிறுவனங்களை, விவேக் பொறுப்பில் விடுவது என்ற, முடிவையும் எடுத்து உள்ளார். அவரே, மிகப்பெரிய சசி குடும்ப த்தின், சர்வ அதிகார மிக்க தலை வராக செயல் பட்டுள்ளார். 

அவரது ஆலோசனைப் படியே, குவித்த பணத்தில் கணிசமான தொகையை, காற்றாலை களில் முதலீடு செய் துள்ளனர். 

ஒரு காற்றா லையாக வாங்காமல், காற்றா லைகள் இணைந்த பெரிய குழுமத்தையே, மொத்த மாக விலைக்கு வாங்கி யுள்ளனர். அதற்கு, இத்துறை யில் பிரபல மாக உள்ள, 'விண்ட் மில்' சுப்ரமணியன் உதவியி ருக்கிறார்.

இது போல், பல நிறுவனங் களை, சமீப காலத்தில் வாங்கி யுள்ளனர். அவற்றுக் காக, பல நுாறு கோடி ரூபாய் விலையாக கொடுத் ததற்கான ஆதாரங் களும் சிக்கி யுள்ளன.
விவேக்கின் சகோதரியர், கிருஷ்ண பிரியா, ஷகிலாவுக்கு, போலி நிறுவனங்களை கையாளும் முக்கிய பொறுப்பை, திவாகரன் தந்துள்ளார். 

அதனால் தான், விவேக், கிருஷ்ண பிரியா ஆகியோரது வீடுகளில், மற்ற இடங்களை விட, அதிக நேரம் சோதனை யிட வேண்டிய நிலை ஏற்பட்டது.

மர்மம் வெளிவரும்

சோதனை யின் போது, வங்கிகளில், 15 'லாக்கர் களில்' முக்கிய மான ஆவண ங்கள் வைத்து இருந்தது தெரிய வந்தது. அவற்றை திறந்து சோதனை யிடும் போது, மேலும் பல நுாறு கோடி களுக்கான மர்மம் வெளிவரும். 

இவர் களின் வீடுகளில் கிடைத்த வைர குவியலை, எங்களால் மதிப்பிட முடிய வில்லை. அதனால், அவற்றை மதிப்பிட, நம்பக மான மதிப்பீட் டாளர் களை, தேடி வருகிறோம்.

இந்த விவகார த்தில், 300 பேர், 400 பேருக்கு, 'சம்மன்'அனுப்பியதாக கூற படுவதில் உண்மை இல்லை. பினாமி சொத்து, போலி பரிவர்த் தனை ஆகிய வற்றை குறி வைத்தே, இந்த சோதனை களை நடத்தினோம். 
அதில், ஒட்டு மொத்த வருமான வரி வட்டாரமே அதிரும் அளவுக்கு, மிகப்பெரிய பலன் கிடைத்து உள்ளது. ஆவணங் களை மதிப்பிடு வதற்கே, அதிக நாட்கள் தேவை.ஒவ்வொரு ஆவணத் தையும் ஆராயத் துவங் கினால், 

ஒன்றில் இருந்து இன்னொன்று என, நுாறு தொடர்புகள் வருகின்றன. அவற்றை விசாரித்து முடிப்பது என்பது, எங்களு க்கு மிகப்பெரிய சவால். இதில், தொடர் புடைய எந்த நபரையும், சாதாரண மாக கருத முடியாது; 

எதுவும் அவரிடம் இருக்காது என, எளிதில் விட்டு விட முடியாது. அதனால், மிகவும் சிரத்தை யுடன், ஆழமான விசாரணை யில் இறங்க உள்ளோம்.

முதல் தகவல் அறிக்கை பதியும் போது, முழு விபரமும் வெளி யாகும். அத்துடன், 'சத்யம் சினிமாஸ்'

வசமிருந்த 'லுாக்ஸ்' திரையரங்கு களை, விவேக்கின் 'ஜாஸ் சினிமாஸ்' வாங்கியது தொடர் பான இருதரப்பு ஆவணங் களையும் கேட்டுள் ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

துப்பாக்கி கிடைத்ததா?
சென்னை, மகாலிங்க புரத்தில் உள்ள, விவேக் வீட்டில், துப்பாக்கி பறிமுதல் செய்யப் பட்டதாக, நேற்று தகவல் வெளி யானது. அது குறித்து, அதிகாரிகள் கூறும் போது, 'துப்பாக்கி எதையும், நாங்கள் பறிமுதல் செய்ய வில்லை. 

அப்படி பறிமுதல் செய்வதாக இருந்தால், அதை, காவல் துறை தான் செய்ய முடியும்' என்றனர். விவேக்கு க்கு, மிக குறைந்த கால அவகாசத் தில், சென்னை போலீசார், துப்பாக்கி உரிமம் வழங்கி யுள்ளனர்.

தங்கம் தந்த சுரானா!

சசிகலா கும்பல், ஊழல் பணத்தை, முதலீடு செய்ய முடியாமல் திணறி யுள்ளது. அப்போது, சென்னை யைச் சேர்ந்த தங்க நகை வியாபாரி சுரானா, அவர்க ளுக்கு உதவி யுள்ளார். 

கோடிக் கணக்கில் பணம் பெற்று, தங்க நகைகளை, முறைகேடாக வாங்கி கொடுத்து உள்ளார். சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள, அவரது வீடு மற்றும் பாரி முனையில் உள்ள அவரது நிறுவனத்தில், 2016ல் வருமான வரித்துறை சோதனை நடந்தது குறிப்பிடத் தக்கது

மன்னார்குடி யில் உள்ள, திவாகரனு க்கு சொந்த மான செங்கமல தாயார் கல்லுாரி யில், சில ஆவண ங்கள் கிடைத்தன. அங்கு, மாணவியர் விடுதி யில், 65 லட்சம் ரூபாய் மறைத்து வைக்கப் பட்டு இருந்ததும் தெரிய வந்தது.

'மிடாஸில்' சிக்கியது என்ன?
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையில், சசிகலா கும்பலுக்கு சொந் தமான, 'மிடாஸ்' மதுபான ஆலை உள்ளது. அங்கு, 5 நாட்கள் தொடர் சோதனை நடந்தது. 

அதில், அவர்கள், கோடிக் கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததற் கான, ஆவணங்கள் சிக்கி யுள்ளன. அது தவிர, வருவாயை குறைத்துக் காட்டிய தற்கான, முக்கிய ஆவணங் களும் சிக்கி யுள்ளன.... Dinamalar
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings