ஜிஎஸ்டி - யை குறைத்தும் விலை குறைக்காத உணவகங்கள் !

0
உணவகங் களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பிறகு, சில உணவகங்கள் உணவு பொருட்களின் அடிப்படை விலையை உயர்த்தி யுள்ளன.
ஜிஎஸ்டி - யை குறைத்தும் விலை குறைக்காத உணவகங்கள் !
இதனால் வரி குறைப்பின் பலனை மக்கள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட் டுள்ளது. நாடு முழுவதும் கடந்த ஜூலை மாதம் முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல் படுத்தப்பட்டது. 

இதில், ஏசி உணவகங் களுக்கு 18 சதவீத மூம், ஏசி அல்லாத உணவகங் களுக்கு 12 சதவீதமும் ஜிஎஸ்டி வரி விதிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, உணவகங் களுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. 

இதைத் தொடர்ந்து அண்மை யில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அனைத்து உணவகங் களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீத மாக குறைக்கப் பட்டது. 

இந்த வரிக் குறைப்பு நவம்பர் 15-ம் தேதி முதல் அமலாகும் என அறிவிக்கப் பட்டது. அதன் பிறகு ஓட்டல்களில் உணவு பொருட் களின் விலை குறையும் என மக்கள் எதிர் பார்த்தி ருந்தனர். 
ஆனால் அதற்கு மாறாக சில ஓட்டல் களில் பொருட் களின் விலையை பழைய வரி விதிப்புக்கு நிகராக உயர்த்தியுள்ளதால் வரி குறைப்பின் பலனை மக்கள் அனுபவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.உதாரண மாக, பிரபல ஓட்டல் ஒன்றில் வரி குறைப்பு அமலா வதற்கு முன்னர் ‘மினி லஞ்ச்’ விலை ரூ.105.88-ஆக நிர்ணயிக் கப்பட்டி ருந்தது. 

அதோடு, ஜிஎஸ்டி 18 சதவீதம் சேர்த்து வாடிக்கை யாளரிடம் மொத்தம் ரூ.125 கட்டணமாக பெறப்பட்டது. அதே ஓட்டலில் வரி குறைப்பு அமலான பிறகு ‘மினி லஞ்ச்’ விலை ரூ.124-ஆக அதிகரிக்கப் பட்டுள்ளது. 

ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் சேர்த்து வாடிக்கை யாளரிடம் இருந்து மொத்தம் ரூ.130 வசூலிக்கப் பட்டுள்ளது. இது தொடர் பாக தமிழ்நாடு ஓட்டல் உரிமை யாளர்கள் சங்கத்தின் தலைவர் வெங்கடசுப்பு ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு பெரும்பாலான ஓட்டல்கள் பாதிக்கப் பட்டன. தமிழகத்தில் மட்டும் ஓட்டல்களுக்கு 30 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. 
இந்நிலையில் 5 சதவீதமாக வரி குறைக்கப்பட்ட பிறகும் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலையை உயர்த்தினால் பாதிப்பு தொடரும். 

ஒவ்வொரு ஓட்டலும் தங்களுக்கு தகுந்தபடி உணவு பொருட்களின் விலையை நிர்ணயிக்கின்றன.  காய்கறிகளின் விலை உயர்வாக இருந்தாலும், எந்தவித விலை உயர்வையும் தற்போது மேற்கொள்ள வேண்டாம். 

அப்போது தான் மக்கள் ஓட்டல்களுக்கு வருவார்கள்’ என ஓட்டல்கள் உரிமை யாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி யுள்ளோம். மேலும், அனைத்து ஓட்டல் உரிமை யாளர்களும் ஜிஎஸ்டி வரியை 5 சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும். 

பழைய வரியை வசூலித்தால் அது தவறு. ஒரு வேளை வரி குறைப்புக்கு பிறகும் யாரேனும் பழைய வரி விகிதங்களின்படி பணம் வசூலித்தால் அது தொடர்பாக தமிழ்நாடு ஓட்டல் உரிமை யாளர்கள் சங்கத்தின் 044-28591500 என்ற 

எண்ணை தொடர்பு கொண்டு வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings