வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையினால் சென்னையில் சனிக்கிழமை இரவு முதல் கனமழை பெய்யும் என்று கூறப்பட்டது,
ஆனால் பெரிய மழை பெய்யவில்லை, இதற்கான காரணங்களை சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் பாலசந்திரன் விளக்கினார்.
செயற்கைக்கோள் புகைப்படங்களைக் காட்டி விளக்கம் அளித்த பாலசந்திரன் கூறியதாவது:
கடலில் உருவான மேகக் கூட்டங்கள் அனைத்தும் கரையை நெருங்கும் தருணத்தில் காற்றின் காரணமாக திசை மாறித் திரும்பி விட்டது. இதன் காரண மாக கடலிலேயே கனமழை பெய்துள்ளது.
இதே போன்று கடலில் உருவான பெரும் பாலான மேகங்கள் காற்றின் காரணமாக திசை மாறி கடலிலேயே மழை யாகப் பொழிந்தது. இதனால் கரைப் பகுதியில் சிறிதளவு மழை மட்டுமே பெய்தது. இவ்வாறு கூறினார்.
Thanks for Your Comments