டெல்லியில் கடும் பனி நிலவு வதாலும் காற்று மாசு அதிகரித் துள்ளதாலும் அனைத்து பள்ளிக ளுக்கும் வரும் ஞாயிற்றுக் கிழமை வரை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் இந்திய மருத்துவ சங்கம் பொது சுகாதார அவசர நிலையை அறிவித்துள் ளது.
டெல்லி மற்றும் அதைச் சுற்றி உள்ள நொய்டா, சண்டிகர் மற்றும் பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங் களின் சில பகுதி களில் கடந்த சில தினங் களாக கடும் பனி மூட்டம் காணப் படுகிறது.
அத்துடன் காற்று மாசும் அதிகரித்து எங்கு பார்த் தாலும் புகை மூட்ட மாக காணப் படுகிறது.
டெல்லியில் உள்ள 18 காற்று மாசு கண்காணிப்பு மையங் களில் காற்று தர குறியீடு (ஏக்யூஐ), ஒரு கன மீட்டருக்கு 475 மைக்ரோ கிராம் ஆக பதிவாகி உள்ளது.
அதாவது 2.5 மைக்ரோ மீட்டருக்கும் குறைவான விட்டம் கொண்ட தூசுகள் கணக்கில் கொண்டு இந்தக் குறியீடு நிர்ணயிக்கப் படுகிறது.
இது மிகவும் அபாய கரமான அளவாகும். இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப் பட்டுள்ளது.
இதன் காரண மாக, டெல்லியில் நேற்று தொடக்கப் பள்ளி களுக்கு மட்டும் விடுமுறை விடப் பட்டது.
இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) பொது சுகாதார அவசர நிலையை அறிவித் துள்ளது. அதில், “டெல்லியில் காற்று மாசு மிக மோச மாக அதிகரித் துள்ளது.
இதனால் ஆரோக் கியமாக உள்ளவர் களுக்கும் உடல் நலக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, பொது மக்கள் நடை பயிற்சி, சைக்கிள் பயிற்சி உட்பட எவ்வித வெளிப்புற நடவடிக் கையிலும் ஈடுபட வேண்டாம்” என எச்சரிக்கை விடுக்கப் பட்டது.
இந்நிலை யில், நேற்றும் நிலைமை இன்னும் மோச மடைந்தது. காலை முதலே கடும் பனி மூட்டமும், காற்று மாசும் மிக மோசமான அளவில் அதிகரித்து காணப் பட்டது.
இதனால் காலையில் நடை பயிற்சி மேற்கொண்ட வர்களும் போக்கு வரத்து போலீஸாரும் மாஸ்க் அணிந்தும் மூக்கை மூடிய படியும் சென்றனர்.
ரயில்கள் மெதுவாக இயக்கப் பட்டன. விமானப் போக்குவரத்தும் பாதிக்கப் பட்டது.
9 மாணவர்கள் உயிரிழப்பு
கடும் பனி மூட்டம் காரண மாக சாலை களில் 10 மீட்டர் தூரத்துக்கு அப்பால் செல்லும் வாகனங் களை பார்க்க முடியாத
நிலை ஏற்பட்ட தால் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. சில இடங் களில் வாகன ங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டன.
குறிப்பாக பஞ்சாப் மாநிலம் பதிண்டா-சண்டிகர் நெடுஞ் சாலையில் உள்ள ஒரு மேம் பாலத்தில்
சென்று கொண் டிருந்த சிமென்ட் கான்கிரீட் மிக்ஸர் லாரி முன்னால் சென்று கொண் டிருந்த பஸ் மீது மோதியது.
இதில் அதில் பயணம் செய்த 9 மாண வர்கள் உயிரி ழந்தனர். மேலும் 5 பேர் காய மடைந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அதே மேம் பாலத்தில் அடுத் தடுத்து பல்வேறு விபத்துகள் நடந்ததா கவும் அதில் காயமடைந் தவர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதாக வும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
இது போல யமுனா விரைவு சாலையில் தங்கவுர் என்ற இடத்தில் சென்று கொண்டி ருந்த ஒரு கார் எரிபொருள் தீர்ந்த தால் திடீரென சாலை நடுவே நின்றது.
இதை யடுத்து, 20-க்கும் மேற்பட்ட கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதின. இதில் டெல்லியைச் சேர்ந்த 8 பேர் காய மடைந்தனர். .
இதனிடையே, டெல்லி துணை முதல்வரும் கல்வி அமைச்ச ருமான மணீஷ் சிசோடியா ட்விட்டரில், “டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் அதிகரித் துள்ளது.
இதைடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமை வரை அனைத்து பள்ளி களையும் மூட உத்தர விடப்பட்டுள்ளது” என பதிவிட் டுள்ளார்.
மேலும் குழந்தைகள், முதிய வர்கள் மற்றும் ஆஸ்த்மா, இருதய நோயால் பாதிக்கப் பட்டவர்கள் அவசிய மின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என டெல்லி அரசு அறிவுறுத்தி உள்ளது.
கடிதம்
இந்த விவகாரம் தொடர் பாக பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ஹரியாணா முதல்வர் மனோகர்லால் கட்டார் ஆகியோ ருக்கு டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “டெல்லி மற்றும் அதை ஒட்டிய பகுதியில் காற்று மாசு அதிகரிக்க பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பக்கத்து மாநிலங் களில் விவசா யிகள் வைக்கோல்களை எரிப்பதும் ஒரு காரண மாக உள்ளது.
எனவே, இதை எரிப்பதற்கு பதில் மாற்று ஏற்பாடு களை மாநில அரசுகள் செய்து தர நடவடி க்கை எடுக்க வேண்டும்” என கூறி யுள்ளார்.
Thanks for Your Comments