தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கப் போகிறது. குழந்தைகளுக்கு மழை என்றாலே குஷி தான்! கன மழை என்றால் லீவு கிடைக்கும்.
அதையும் தாண்டி மழைக்கு முன்பாக மண்ணில் எழும் வாசம், தெருக்களில் புரண்டோடும் வெள்ள நீர், அதில் காகிதக் கப்பல் விடும் வாய்ப்பு,
மழை ஓய்ந்ததும் மரத்தடியில் கிளைகளை அசைத்து நனைவது, திடீரெனக் குறுக்கிடும் மழையில் நனையும் சந்தோஷம்.
உடலுக்குள் நச்சுகளை நீக்க தண்ணீர் போதும்
இப்படி மழை அழைத்து வரும் சுவாரசியங்கள் ஏராளம். மழை குறித்த சுவாரசியங்கள் இன்னும் கூட நிறைய உண்டு. அவற்றையும் பார்ப்போமா?
நீர்த்துளி களாகப் பெய்தால் மழை என்கிறோம். இதுவே நீர்த்துளி களுக்குப் பதிலாகப் பனிக்கட்டி துகள்களாகவும், பனித்தூவலாகவும் பெய்தால் அது ‘ஆலங்கட்டி மழை’.
பூமியில் மழையே பெய்யாத நிலப்பரப்பு, அண்டார்டிகா வில் உள்ளது. உறைபனி சூழல் நிலவுவ தால் இங்கு நீர்த் துளியாக மழை பெய்யாது.
இதனால் இது பூமியின் ‘வறண்ட’ கண்டம் எனப்படு கிறது.பாலை வனங்களி லும் மழை பெய்வ துண்டு.
ஆனால், அவை அங்கு நிலவும் அதிக வெப்பம் காரணமாகத் தரையை அடையும் முன்பே ஆவியாகி விடும். பூமியைப் போலவே மற்ற கோள் களிலும் மழை பெய்வ துண்டு.
ஆனால், அவை நீராலான மழை கிடையாது. வியாழன் கோளில் கந்தக அமில மழையும், சனி கோளின் நிலவான டைட்டனில் மீத்தேன் மழையும் பெய்யும்.
மழை நீரின் pH அளவு 5.6 ஆகும். மழை நீருக்குச் சற்றே அமிலத் தன்மை உண்டு. இந்த pH அளவில் குறைந்த தாகப் பெய்யும் மழையே அமில மழை. தொழிற் சாலைகள் வெளியிடும் மாசுவால்
வளிமண்ட லத்தில் பெருகும் சல்ஃபர் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகியவை அமில மழைக்குக் காரண மாகின்றன.
ஆலங்கட்டி மழை, பனி மழை போல, மெக்சிகோவின் தெற்கேயுள்ள ஹாண்டுராஸ் (Honduras) நாட்டில் மீன் மழை பிரபலம்.
18-ம் நூற்றா ண்டில் வருடந் தோறும் கன மழையின் போது நன்னீர் வாழ் மீன்கள் வானிலி ருந்து கொட்டியதை ஆராய்ச்சி யாளர்கள் உறுதி செய்து ள்ளனர்.
தாய்லாந்து போன்ற நாடுகளிலும் மீன், தவளை, நீர்ப்பாம்பு உள்ளிட்ட நீர்வாழ்வன மழை யுடன் கொட்டி உள்ளன.
சூறைப் புயலின் போது மிகப்பெரும் நீர் நிலைகளி லிருந்து மேகத்துக்கு உறிஞ்சப் படும் நீர், மழை யாகப் பெய்யும் போது மீன்கள் விழுவதாக ஆராய்ச்சி யில் சொல்லி யுள்ளார்கள்.
சில இடங்களில் சிவப்பு நிறத்தில் பெய்வதை ‘ரத்த மழை’என்று பயமுறுத்து வார்கள்.
சிவப்பு மட்டுமல்ல, மஞ்சள், கறுப்பு மற்றும் பச்சை நிறங்களிலும் மழை பெய்வதுண்டு. கேரளாவின் கோட்டயம், இடுக்கி பகுதிகளில் இம்மாதிரி வண்ண மழைகள் பெய்துள்ளன.
காற்றில் பரவியிருக்கும் மாசு, நுண்ணு யிரிகள் மழையில் கரைவதே வண்ண மழை பெய்யக் காரணம்.
நீண்ட காலமாக மழை பெய்யாத பகுதிகளில், மேகங்களைத் தூண்டி விட்டுச் செயற்கை மழையைப் பெய்யச் செய்கிறார்கள்.
விமானங்கள் மூலம் உலர் பனியை மேகங்களில் தூவிச் செயற்கை மழை உண்டாக்கப் படுகிறது.
பாலைவனப் பரப்பு அதிக முள்ள ஆப்ரிக்க நாடான போட்ஸ் வானாவில், மழை என்னும் பொருள்படும் ‘புலா’ என்ற பெயரில் பணத்தை அழைக் கிறார்கள்.
மழைக்கு எனத் தனியாக வாசனை கிடையாது. மண்ணில் அவை விழும் போது, அங்கிருக்கும் பாக்டீரியாக் களுடன் மழை நீர் வினை புரிந்து, நாம் உணரக் கூடிய ‘மண் வாசனை’பிறக்கிறது.
சயனைட் கொலையாளி வைத்தியராய் - விசித்திரமான விஞ்ஞானி !
மழையில் நனைந்த செடி கொடி களின் இலைகள் முன்பை விட பச்சைப் பசேலென்று காட்சி யளிக்கும்.
இதற்கு மழை நீரில் கரைந்து வரும் நைட்ரஜனே காரணம். மழைக்கு நாம் பயன் படுத்தும் குடை, வெயிலில் இருந்து தப்பிக் கவே முதலில் உருவாக்கப் பட்டது.
நிழலுக் காக என்று பொருள் படும் லத்தீன் வார்த்தை யிலிருந்தே ‘அம்ப்ரெல்லா’என்ற பெயர் உருவானது. தற்போது பயன் பாட்டில் உள்ள குடை, 11-ம் நூற்றாண்டு சீனாவில் புழக்கத் துக்கு வந்தது.
அதிக மழை பெய்வ தால் இந்தியாவி லுள்ள மேகாலயா மாநிலம் சிரபுஞ்சி மற்றும் மாவ்சின்ராம் ஆகிய இடங்கள் உலகப் புகழ் பெற்றுள்ளன.
நாம் பயன்படுத்தும் பற்பசையில் கார்பன் !
காசி குன்றுகளில் அமைந் திருக்கும் மாவ்சின்ராம் கிராமம், உலகிலேயே மிக அதிக சராசரி மழை பெய்யும் இடம். இங்கு ஆண்டு சராசரி மழை 11,873 மி.மீ..
இதனால் உலகின் மிகவும் ‘ஈரமான’ பகுதி என மாவ்சின்ராம் அழைக்கப் படுகிறது. இரண்டாம் இடத்தி லிருக்கும் சிரபுஞ்சி யின் ஆண்டு சராசரி மழை யளவு 11,430 மி.மீ.
Thanks for Your Comments