சென்னை கோபால புரத்தில் திமுக தலைவர் கருணாநிதியை, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித் துள்ளனர்.
உடல் நலக் குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தி லிருந்து திமுக தலைவர் கருணாநிதி வீட்டி லிருந்த படி ஓய்வெடுத்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த பிரதமர் மோடி, கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித் ததோடு, டெல்லியில் வந்து ஓய்வெடுக்க வேண்டு மென நெகிழ்வுடன் கூறிச் சென்றார்.
தொடர்ந்து நேற்றைய தினத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆகியோர்,
கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றனர். தொடர்ந்து ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு தலைவர் களும் சந்தித்துள்ளனர்.
இந்த சூழ்நிலையில் இன்று ( நவம்பர் 12) சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த புகைப் படத்தை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி ,
"எனக்கு அரசியல் அரிச்சுவடி கற்றுக் கொடுத்தவர், தனிப்பட்ட முறையில் என் மேலும் என் குடும்பத்தினர்
மேலும் அன்பு வைத்தி ருந்தவர் என்பதின் அடிப்படை யில் கலைஞரின் உடல்நிலை விசாரிக்க குடும்பத்துடன் சென்றி ருந்தேன்" என்று குறிப்பிட் டுள்ளார்.
மேலும் அவர் "இரண்டு வாரம் முன்னர் நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சி யான இந்த சந்திப்பிற்கு தயவு செய்து அரசியல் சாயம் பூச வேண்டாம்.
தற்போது சந்திப்பின் புகைப் படங்கள் வெளியிடப் பட்டதால் இதனை பதிவு செய்கிறேன்.
அரசியலில் கொள்கை அடிப்படையில் எதிரெதிராக இருப்ப வர்கள் எதிரிகளாக சித்தரிக்கப் படுவதை மாற்றி யமைப்போம்"என்றும் கறிப்பிட் டுள்ளார்.
Thanks for Your Comments