மகாராஷ்டிரா வை பூர்வீகமாகக் கொண்ட கோபால் ராவ் குடும்பம் வணிகம் செய்வதற் காக கும்பகோண த்துக்கு வந்தது.
இந்தக் குடும்பத்துப் பிள்ளை யான டி.கோபால் ராவ் ஆங்கில த்திலும் சமஸ் கிருதத் திலும் தனிப் புலமை பெற்ற வராகத் திகழ்ந்தார்.
இவரது ஆங்கிலத் திறமையை அறிந்து வியந்த ஆங்கி லேயர்கள், தென்னக த்தின் கேம்பிரிட்ஜ் என்று அழைக்கப் படும் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் இவரை ஆசிரியராக நியமனம் செய்தனர்.
இந்தக் கல்லூரி யின் வளர்ச்சிக் காக அர்ப்பணிப் புடன் செயல் பட்ட கோபால் ராவ், பொறுப்பு முதல்வராக இருந்து ஓய்வு பெற்றார்.
பணி ஓய்வுக்குப் பிறகும் கல்லூரி யுடன் தொடர்பில் இருந்த ராவ், இறுதி வரை மாண வர்கள் மத்தியில் செல்வாக் கான மனிதராக திகழ்ந்தார்.
கோபால் ராவ் மறைந்த பிறகு, அவரிடம் பயின்ற மாணவர்கள் தங்களது ஆசானுக்கு சிறப்புச் செய்ய நினைத்தனர்.
காலத்து க்கும் அவரது பெயர் நிலைத் திருக்க வேண்டும் என்பதற்காக அவரது பெயரில் நூலகம் ஒன்றைத் தொடங்கி னார்கள்
அந்த மாண வர்கள். கும்பகோணம் காந்தி பூங்கா அருகே வாழைத் தோட்டத்தில் 1895-ம் ஆண்டு மே மாதம் கோபால் ராவ் நூலகம் உதய மானது.
122 ஆண்டுகள் கடந்தும் குன்றாத வளர்ச்சி யுடன் செயல்பட்டுக் கொண்டி ருக்கும் இந்த நூலக த்தில் இல்லாத நூல்களே அரிது.
அந்தள வுக்கு புத்தகங் களைக் குவித்து வைத்து அறிவுக் கண்ணை திறந்து கொண்டிருக் கிறார்கள்.
10 ஆயிரம் சதுர அடியில்..
நம்மிடம் கோபால் ராவ் நூலகத் தின் பெருமை களை அடுக்கிய அதன் செயலாளர் ஜி.கே.பால சுப்பிரமணியன், “சுமார் 10 ஆயிரம் சதுர அடியில் அமைந் திருக்கும் இந்த நூலக த்தில் 48 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன.
இதில் சமஸ்கிருத புத்தகங்கள் மட்டுமே ஆறாயிரம் இருக்கும். தற்போது, எங்களது நூலகத்தில் 2 ஆயிரம் பேர் உறுப்பினர் களாக உள்ளனர்.
நூலக உறுப் பினர்கள் மட்டு மில்லாது உறுப்பினர் இல்லாத வர்களும் போட்டித் தேர்வுகள் உள்ளிட்ட வைகளுக்குத் தேவை யான தரவுகளை இங்கிருந்து திரட்டிச் செல் கின்றனர்.
இங்குள்ள புத்த கங்கள் அனைத்தும் கணினி யில் பதிவு செய்யப் பட்டு ‘பார்கோடு’ முறை யில் நிர்வகிக்கப் படுகின்றன.
இந்த நூலக த்தின் வளர்ச்சிக்கு ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த சி.வி.நரசிம்மன் பெரும் பங்காற்றி இருக்கிறார்.
அவரைப் போற்றிக் கவுரவிக்கும் விதமாக இந்த நூலகத்தில் சி.வி.நரசிம்மன் ஹால் என்ற அரங்கையும் அமைத்து நிர்வகித்து வருகிறோம்.
சிட்டி யூனியன் வங்கியின் முன்னாள் தலைவர் என். நாராயணன், இந்த நூலகத்தின் முன்னாள் அறங் காவலர் ஜி.கே.மூப்பனார், ஹஸ்முக்லால் மேத்தா உள்ளிட் டோரும்
இந்த நூலக வளர்ச்சிக் காக பெரும் உதவி களைச் செய்து ள்ளனர். வாசிப்பு மட்டு மில்லாது,
இசை உள்ளிட்ட பிற கலை களையும் போற்றி வளர்க்க வேண்டும் என்ப தற்காக குழந்தை களுக்கு வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை உள்ளிட் டவையும் இங்கு தினமும் கற்றுத் தரப் படுகிறது.
தவிர, மாதந் தோறும் இசை நிகழ்ச்சியும் நடத்தப் படுகிறது. ஆண்டு தோறும் நான்கு நாட்கள் பெரிய அளவிலான இசை நிகழ்ச்சி களும் இங்கு நடத்தப் படுகின்றன” என்று சொன்னார்.
வாழும் காலத்தில் கும்பகோணம் பகுதி மாணாக் கர்களுக்கு தலை சிறந்த ஆசானாக இருந்து கோபால் ராவ் பணி செய்தார்.
அவரது பெயரால் அவரது மாணாக் கர்கள் உருவாக்கிய இந்த நூலகம் அவர் விட்டுச் சென்ற பணியை 122 ஆண்டுகள் கடந்தும் செவ்வனே செய்து கொண்டி ருக்கிறது.
Thanks for Your Comments